Header Ads

Header ADS

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் கலைஞர் கருணாநிதி மறைவு செய்தி

கருணாநிதி, நியூயார்க் டைம்ஸ், அமெரிக்கா



நியூயார்க் : கருணாநிதியின் மறைவு தொடர்பாக, அமெரிக்காவிலிருந்து
வெளியாகும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : அரசியல்வாதி, சினிமா பிரமுகர் என பன்முக திறமை கொண்ட இந்தியாவின் மூத்த அரசியல்வாதி முத்துவேல் கருணாநிதி (94) உடல்நலக்குறைவு காரணாமாக காலமானார்.
வயது மூப்பின் காரணமாக, ஏற்பட்ட உடல்நலக்குறைவிற்காக, சென்னை காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிலநாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை, (7 ம் தேதி) உடற்பாகங்கள் செயலிழந்ததன் காரணமாக, காலமானார். அவர் உடல்நலம் பெற வேண்டி, மருத்துவமனை வளாகத்தில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் காத்துக்கிடந்தனர்.

1950ம் ஆண்டின் முற்பகுதியில், தமிழ் திரையுலகில் கருணாநிதி அசைக்கமுடியாத சக்தியாக விளங்கினார். பின், அரசியலில் பிரவேசித்த அவர், 5 தலைமுறைகளாக கோலோச்சி வந்துள்ளார். திராவிட முன்னேற்ற கட்சியை துவக்கிய கருணாநிதி 1969ம் ஆண்டில், தமிழக முதல்வராக பதவியேற்றார். 5 முறை முதல்வர் பதவி என 19 ஆண்டுகள் முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளார்.

கருணாநிதியின் மறைவிற்கு, பிரதமர் மோடி, டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுபெரும் தலைவரை இழந்துவிட்டோம். நேர்மறை சிந்தனையாளர். ஏழைகளின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக, தனது வாழ்வையே தியாகம் செய்தவர் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.


தமிழக அரசியலில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை தொடர்ந்து இரண்டு வருட இடைவெளியில் திமுக தலைவர் கருணாநிதியும் காலமாகியுள்ளதால், பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மேற்கோள் காட்டியுள்ளது






















No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.