அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளியில் படிக்கும் பட்சத்தில் அந்த ஆசிரியர்களுக்கு பணிமாறுதலில் முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
அரசு
பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளியில் படிக்கும் பட்சத்தில் அந்த ஆசிரியர்களுக்கு பணிமாறுதலில் முன்னுரிமை வழங்கப்படுவது குறித்து..
பரிசீலிக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்
32 மாவட்டங்களில் நடமாடும் நூலங்கங்கள் 2 மாதத்தில் ஏற்படுத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசினார்.
மாணவர்கள் திறன் மேம்பாடு, வாசிப்பு பழக்கத்தினை மேம்படுத்தும் வகையில் அரசு செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் இறுதிக்குள் 3,000 ஸ்மார்ட்
வகுப்பறைகள் கொண்டுவரப்பட உள்ளதாகவும், அனைத்து பள்ளிகளும் கணினி மயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் படித்தால் பணி மாறுதலில் முன்னுரிமை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் வரும் 15-ம் தேதி யாழ்ப்பாண நூலகத்திற்கு ஒரு லட்சம் நூல்களை வழங்க உள்ளதாக சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
No comments
Post a Comment