பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
உரை:
பயன்
நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.
பழமொழி :
After a
dinner sleep a while
உண்ட
களைப்பு தொண்டருக்கும் உண்டு
பொன்மொழி:
நம்
காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா.
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .
பொது
அறிவு :
1.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?
ஜே.ஏ.ஹிக்கி
2.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?
ஜோதி
பாசு
நீதிக்கதை :
பொய்
சொல்லாதே - தமிழ் நீதிக்கதை
(Don't Lie -
Tamil Moral Story)
அது
ஒரு அழகிய கிராமம். அங்கு முத்து என்ற விவசாயி தன் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தான்.
முத்து தினமும் தன்னுடைய ஆடுகளை அருகில் உள்ள காட்டிற்கு கூட்டிச்சென்று மேய்ப்பது வழக்கம். காலையில் சென்றால் அவன் மாலையில் வீடு திரும்புவான்.
ஒரு
நாள் முத்து தன்னுடைய சொந்த வேலையின் காரணமாக பக்கத்து ஊருக்கு செல்லவேண்டி இருந்தது. இதனால் ஆடுகளை மேய்க்கும் பொறுப்பை தன்னுடைய மகன் ராமுவிடம் கொடுக்கலாம் என நினைத்தார். முத்துவிற்கு ஒரு பயமும் இருந்தது. ராமு ஒரு விளையாட்டு பையன், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்யமாட்டான். வேறு வழியில்லாமல் அவனிடமே முத்து ஆடுகளை மேய்க்கும் வேலையை கொடுத்து முத்து பக்கத்து ஊருக்கு புறப்பட்டார்.
அடுத்த நாள் காலையில் ராமு ஆடுகளை பக்கத்தில் உள்ள காட்டிற்கு ஓட்டிச்சென்றான்.
காட்டை அடைந்ததும் ஆடுகள் புற்களை மேயத் தொடங்கின. ராமு அருகில் உள்ள ஒரு பாறையின் மேல் அமர்ந்தான். அவனுக்கு வேலை பார்த்து பழக்கம் இல்லை என்பதால் பொழுது போகவில்லை.
தூரத்தில் ஒரு சிலர் வயல் வேலை செய்து கொண்டு இருந்தனர்.
வேலை செய்பவர்களின் கவனத்தை ஈர்க்க எண்ணிய ராமு திடீரென "புலி வருது, புலி வருது", என்று கூச்சலிட்டான்.
ராமுவின் அலறலை கேட்டு வயலில் வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் புலியை விரட்ட கைகளில் கட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு ராமு இருக்கும் இடத்தை நோக்கி விரைவாக வந்தனர்.
வந்தவர்கள் அனைவரும் "புலி எங்கே" என்று ராமுவிடம் கேட்டனர். அனால் ராமுவோ, "புலி வரவில்லை, நான் பொய் சொன்னேன்", என்று கூறினான். இதனால் கோபமடைந்த அவர்கள் ராமுவை திட்டி விட்டு சென்றனர். ராமுவிற்கோ அவர்களை ஏமாற்றியதை நினைத்து மகிழ்ச்சி அடைந்தான். ராமு ஆடுகளை கூட்டிக்கொண்டு வீட்டை நோக்கி சென்றான்.
அடுத்த நாளும் ராமு புலி வருது என்று கூச்சலிட்டு வேலை செய்துகொண்டு இருந்தவர்களை ஏமாற்றினான்.
மூன்றாவது நாள் ராமு ஆடுகளை மேய்க்க விட்டு அதே பாறையின் மேல் அமர்ந்தான். சிறிது நேரம் கழித்து சற்று தொலைவில் ஒரு புலி வருவதை பார்த்தான். உடனே பாறையின் பின்னால் ஒளிந்துகொண்டு, உண்மையிலே "புலி வருது, புலி வருது" என்று கூச்சலிட்டான்.
ராமு
அலறலை கேட்ட அனைவரும் அவன் இன்றும் பொய் தான் சொல்வான் என்று நினைத்து யாரும் உதவிக்கு வரவில்லை. அவர்கள் தங்களின் வேலையை தொடர்ந்தனர்.
பாய்ந்து வந்த புலி ஒரு ஆட்டினை தூக்கிக்கொண்டு சென்றது.
நான்
உண்மையை கூறிய பொழுது யாரும் உதவிக்கு வரவில்லையே என்று வருத்திக்கொண்டு மீதி இருக்கும் ஆடுகளை கூட்டிக்கொண்டு தன் இல்லம் நோக்கி சென்றான்.
நீதி:
ஒருவன் வார்த்தையில் உண்மை இல்லை என தெரிந்தால் அவன் எப்போது உண்மை சொன்னாலும் அதை யாரும் உண்மை என
நம்ப மாட்டார்கள்.
இன்றைய செய்தி துளிகள் :
1.முன்னால் முதல்வர் திமுக தலைவர் டாக்டர் மு.கருணாநிதியின் உடல் மெரினாக் கடற்கரையில் அண்ணா சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது.
2.நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கலைஞருக்கு மவுன அஞ்சலி
3.திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு புதுச்சேரியில் வெண்கலச் சிலை: முதல்வர் நாராயணசாமி
4.உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, கே.எம். ஜோசப் பதவியேற்பு
5.யு-20 கால்பந்து போட்டி : அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா
No comments
Post a Comment