Header Ads

Header ADS

இலவச சைக்கிள் வழங்குவதற்காக மாணவர்களின் விவரம் சேகரிப்பு - பள்ளிக்கல்வித்துறை!


இலவச சைக்கிள் வழங்க பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளின் அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் எவ்வளவு மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள் என்ற விவரங்களை சேகரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் குறித்த காலத்தில் வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான பட்டியல் அனுப்பும்படி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 

  இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு சார்பில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2017-18ம் ஆண்டு மற்றும் 2018-2019ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவ, மாணவிகளின் தேவைப்பட்டியல் விவரங்கள் சேகரிக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

அதில் மாணவ, மாணவிகளின் விவரங்கள், பள்ளிகளின் பெயர்கள், எத்தனை சைக்கிள் தேவைப்படுகிறது போன்றவை நிரப்பி அனுப்ப வேண்டும். இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களில் இன்னும் ஓரிரு நாட்களில் தலைமை ஆசிரியர்கள் அந்த பட்டியலை ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.