பள்ளிக்கல்வி -அரசு மாதிரிப் பள்ளி பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் இன்று தொடக்கம் . - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 15, 2018

பள்ளிக்கல்வி -அரசு மாதிரிப் பள்ளி பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் இன்று தொடக்கம் .



தமிழகம் முழுவதும், 32 மாதிரி பள்ளிகள் ஏற்படுத்தும் திட்டம், இன்று துவக்கி வைக்கப்படுகிறது. தமிழக பள்ளி கல்வித் துறையில், பாடத்திட்ட மாற்றம், பிளஸ் 1-க்கு பொதுத் தேர்வு, 'ரேங்கிங்' முறை ஒழிப்பு, பல்வேறு வகைப் 


பள்ளிகள் இணைப்பு என, பல புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரிசையில், மத்திய அரசு நிதியுதவியுடன், மாவட்டம் தோறும் குறைந்தபட்சம், ஒரு மாதிரிப் பள்ளி உருவாக்க, பள்ளிக் கல்வித்துறை 




திட்டமிட்டுள்ளது. இதை அமல்படுத்தும் வகையில், 32 மாவட்டங்களிலும், தலா, ஒரு மாதிரிப் பள்ளி அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு செங்கோட்டையன், இன்று (15.8.18) துவக்கி வைக்கிறார். சென்னையில், எழும்பூரில் உள்ள, மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியை, மாதிரிப் பள்ளியாக மாற்ற, அனுமதிக்கப்பட்டுள்ளது.





No comments: