கேரளா செல்லும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் கிடையாது..ரெயில்வே அமைச்சர்
கேரளா மாநிலம் வெள்ளத்தில் மூழ்கி, பல லட்சம் மக்கள் தங்களது வீடு,
உடமைகளை இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
கேரளாவுக்கும் உதவ பல்வேறு மாநிலங்களும், தொண்டு நிறுவனங்களும் முன்வந்துள்ளன.
கோவை
மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன. பல பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்துக்கு நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ரெயில்கள் மூலம்கேரளாவுக்கு அனுப்பப்படும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்துள்ளார்
No comments
Post a Comment