Header Ads

Header ADS

ஆதார் மூலம் சிம் வாங்கினால் இனி முகப்பதிவு அவசியம்


ஆதார் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் சிம் கார்டு வாங்கும்போது, முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது

 


ஆதார் விவரங்களை சரிபார்க்க தற்போது விரல் ரேகை பதிவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ரேகை பதிவை குளோனிங் முறையில் எடுத்து பலர் மோசடி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


 
இதனால், ஆதார் அடையாள அட்டை எடுக்கும்போது பதியப்பட்ட முகத்தையும், சிம் கார்டு வாங்க வருவோரின் முகத்தையும் பொருத்திப் பார்த்து அடையாளம் காணும் நடைமுறை அமலுக்கு வருகிறது. ஆதார் தவிர்த்த பிற அடையாள அட்டைகளை வழங்கி சிம் கார்டு வாங்குபவர்களுக்கு இந்த நடைமுறை பொருந்தாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.

முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் திட்டத்தை இன்னபிற சேவைகளுக்கும் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் முகத்தை படம் பிடித்து அடையாளம் காணும் இந்த திட்டம் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
 
கடந்த சில மாதங்களாக சிம் கார்டு விற்பனையாளர்கள் ஆதார் விவரங்களை போலியாக தயாரித்து ஆயிரக்கணக்கான சிம்கார்டுகளை இயக்கி வருவதாக தகவல்கள் கண்டறியப்பட்டது. இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கும் நடவடிக்கையாக இந்த  முகப்பதிவு முறை அமல்படுத்தப்படுகிறது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.