பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:20.08.2018
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்.
உரை:
செய்யக்கூடிய வகையால், எக்காரணத்தாலும் விடாமல் செல்லுமிடமெல்லாம் அறச்செயலைப் போற்றிச் செய்ய வேண்டும்.
பழமொழி :
All this
fair in love and war
ஆபத்துக்கு பாவமில்லை
பொன்மொழி:
தாராள மனம் படைத்த முதலாளி அவரது தொழிலாளி எவரையும் எந்நாளும் கைவிட மாட்டார்.
- ஜி.டி.நாயுடு.
இரண்டொழுக்க பண்பாடு :
1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.
2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.
பொது
அறிவு :
1.நிலநடுக்கம் வருவதை முன்கூட்டியே அறியும் விலங்கு?
நாய்
2.எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60
நீதிக்கதை :
சிங்கமும் சிலையும் - ஈசாப் நீதிக் கதை
(The Lion
and the Statue Aesop's Fable)
ஒரு
நாள் ராமு தன்னுடைய சிங்கத்தை அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்கு தேன் எடுப்பதற்க்காக சென்று கொண்டிருந்தான். செல்லும் வழியில் தங்களில் யார் அதிக வீரமுள்ளவர்கள் என்பதைப்பற்றி சிங்கமும் ராமுவும் பேசிக்கொண்டு சென்றனர்.
அப்போது செல்லும் வழியில், "ஒரு மனிதன் சிங்கத்தைக் கீழே தள்ளி அதன் மீது நிற்பதைப்போல" ஒரு சிலை இருந்தது.
''அதைப் பார்த்தாயா? யாருக்கு அதிக வீரம் இருக்கிறது என்பது இதிலே தெரிகிறது.'' என்றான் ராமு.
''ஓ, அது மனிதன் செய்த சிலை. ஒரு சிங்கம் அந்த சிலை செய்துருந்தால், மனிதனைக் கீழே தள்ளி அவன் மீது, தான் நிற்பது போலச் செய்திருக்கும்.'' என்று சொல்லியது சிங்கம்.
நீதி:
தனக்கென்றால் தனி வழக்குதான்.
இன்றைய செய்தி துளிகள் :
1.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
2.12ஆம் வகுப்பு படித்தாலே வேலை உறுதி என்ற வகையில் இனி பள்ளிக் கல்வியின் தரம் உயர்த்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
3."புதிய பாடப் புத்தகங்களில் உள்ள குறைபாடுகள் மறுபதிப்பில் சரிசெய்யப்படும்," என பள்ளிக் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் கூறினார்.
4.கேரளாவில் மிக மோசமான மழை முடிவிற்கு வந்துள்ளது: 'ரெட் அலார்ட்'வாபஸ்
5.ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச்சுடு போட்டியில் இந்தியா அணிக்கு வெண்கலம் பதக்கம்
No comments
Post a Comment