Header Ads

Header ADS

இடைநிலை ஆசிரியர்களை பணிய வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது - ஜி.கே.வாசன் வலியுறுத்தல்



இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல், அவர்களைப் பணிய வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.



இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, எட்டாவது ஊதிய குழு முரண்பாடுகளைக் களைய வேண்டும், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும், அரசாணை மூலம் அரசுப் பள்ளிகளை மூட மேற்கொள்ளும் முயற்சிகளைக் கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஏழு 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.



கல்விப் பணிக்கு ஏதேனும் தடையோ, தடங்கலோ அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதைச் சரி செய்ய வேண்டிய நடவடிக்கைகளில் அரசு ஈடுபட வேண்டும். அதை விடுத்து ஆசிரியர்களைப் பணிய வைக்கும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது.



தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களின் பிரதிநிதிகளை உடனடியாக அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கைகளுக்கு சுமுகத் தீர்வு காண வேண்டும். அதன் மூலம் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.