இந்திய தேசிய கீதத்தை பாடிய ரவீந்திரநாத் தாகூரின் அபூர்வ வீடியோ
முதல் இந்தியக் குடியரசுத் தலைவரான ராஜேந்திரப் பிரசாத் 1950ஆம் ஆண்டு வங்கதேசக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் ’ஜன கன மன’ பாடலை இந்திய தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அதற்கு முன்பே 1911ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ரவிந்திரநாத் தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி ’ஜன கன மன’ பாடலை முதல் முதலில் பாடியுள்ளார்.
ஆனால், நம் இந்திய தேசிய கீதத்தை அதை எழுதிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரே தன் சொந்தக்குரலில் கம்பீரமாகப் பாடியிருக்கிறார். அவர் தேசிய கீதம் பாடும் காட்சி இணையத்தில் இன்று பரவாலக பகிரப்படுகிறது.
இதோ,
தாகூரின் தேசிய கீதம் அவரது குரலிலேயே…
No comments
Post a Comment