ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, 'நோட்டீஸ்' : அநியாய கட்டணம் கேட்டால் அரசே நிர்வகிக்கும்
அரசு
அனுமதித்ததை விட அதிக கட்டணம் வசூலித்தால், நிர்வாகத்தை அரசே கையில் எடுக்கும்' என, 10 ஆயிரம் தனியார் பள்ளிகளுக்கு, பள்ளி
கல்வித்துறை, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது. தமிழகத்தில், 2009ம் ஆண்டு, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, பள்ளிகளில், எவ்வளவு கல்விக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதை நிர்ணயிக்க, கட்டண நிர்ணய கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த
கமிட்டி, மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு பள்ளிக்கும் கட்டணம் நிர்ணயித்து வருகிறது. ஆனால், பல பள்ளிகள், அந்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிப்பதாக, தொடர் புகார்கள் வருகின்றன
No comments
Post a Comment