Header Ads

Header ADS

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ் .!


சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசம்.!அமைச்சர் அதிரடி உத்தரவு  பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 32 மாவட்ட நூலகங்களில், ..எஸ். பயிற்சி வகுப்புகள்,13 மாவட்டங்களில் நடமாடும் நூலகங்கள் ,நூலகங்கள் மூலம் சிவில் சர்வீஸ் தேர்விற்கு பயிற்சி ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி ,அடுத்த கல்வி ஆண்டு முதல், அரசு பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மாற்றம்,12 ஆம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் "திறன் வளர்ப்பு பயிற்சி (Skills Training)" தொடர்பான புதிய பாடம் சேர்க்கை , 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்,ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு ,ஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பதிவேற்றும் வசதி உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டும்,தயாராகியும் வருகின்றது.


இந்நிலையில் அரசு பள்ளி மாணாவர்கள் தற்போதுவரை நகரப்பேருந்துகளில் மட்டுமே பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதனால் இந்த முறையை மாற்றும் விதமாக போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்திருந்தாலே அரசுப்பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.
மேலும் அரசுப்பேருந்துகளில் மாணவர்களை அனுமதிக்க நடத்துனருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அடையாள அட்டைகள் இன்னும் 2 மாதத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.