Header Ads

Header ADS

வதந்திகளுக்கு வாட்ஸ் அப் விதித்த கட்டுப்பாடு!


வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளைத் தடுக்க அந்நிறுவனம் சில முக்கிய
கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான வாட்ஸ் அப்பில் பரவும் வதந்திகளால் இந்தியாவில் ஏற்படும் உயிர் பலிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் நடவடிக்கையாக வாட்ஸ் அப் நிறுவனம் கடந்த மாதம் மெசேஜ்களை ஃபார்வர்டு செய்வதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, அதனைச் சோதனை செய்து வருவதாகத் தெரிவித்திருந்தது. தற்போது சோதனை முடிந்து அந்த சேவை அடுத்த வாரம் முதல் அனைத்துப் பயனர்களுக்கும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த வாரம் முதல் அனைத்துப் பயனர்களுக்கும் தற்போது அவர்கள் பயன்படுத்தும் வெர்சனிலேயே மெசேஜ் சேவை வரையறுக்கப்பட உள்ளது" என்று தெரிவித்துள்ளது.


வாட்ஸ் அப்பில் போலிச் செய்திகள் பரவுவதை தடுக்கக் கோரி உலகம் முழுதும் உள்ள அதன் பயனர்கள் அந்நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதன் விளைவாக கடந்த மாதம் வாட்ஸ் அப் நிறுவனம், ஃபார்வர்டு செய்திகளை சுட்டிக்காட்டும் வசதி; ஐந்து முறை மட்டும் குறுஞ்செய்திகளை ஃபார்வர்டு செய்யும் வசதி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தியது. மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஷேர் செய்ய முன்பு இருந்த `குவிக் ஷேர்' ஆப்ஷனையும் அதிரடியாக நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.