சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு நிலம் கையகப்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: சேலம்- சென்னை 8 வழிசாலைக்கு நிலம் எடுக்க ஐகோர்ட் இடைக்கால தடைவிதித்துள்ளது. விவசாயிகள் உட்பட பலர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகளை அதிகாரிகள் துன்புறுத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் மனுவை விசாரித்த ஐகோர்ட் நிலம் கையகப்படுத்துவதற்கு தடை விதித்து உத்தரவிட்டனர். உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம், பவானி சுப்புராமன் அமர்வு அதிரடி தீர்பளித்துள்ளனர்.
சேலத்தில் இருந்து தமருமபுரி, கிருஷ்ணகிரி, தி.மலை, காஞ்சி மாவட்டங்கள் வழியாக 8 வழிச்சாலை போடப்படுகிறது. 8 வழிச்சாலை விளைநிலங்கள் வழியாக செல்வதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
No comments
Post a Comment