ஆசிரியர் ஊதிய முரண்பாடு ஒருநபர் குழுவுக்கு மேலும் 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது ஊதியக்குழு
பரிந்துரையின்படி கடந்த 1-10-2017 முதல் சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. 7வது ஊதியக்குழுவில் நிறைய முரண்பாடுகள் உள்ளது என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 7வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நிதித்துறை செயலாளர் (செலவினம்) சித்திக் தலைமையில் ஒரு நபர் கமிட்டி விசாரணை நடத்தி ஜூலை 31ம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கை அளிக்கும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 21ம் தேதி தமிழக அரசு அறிவித்தது.
ஆனால் சித்திக் கமிட்டி தனது இறுதி அறிக்கையை ஜூலை 31ம் தேதி அரசுக்கு அளிக்கவில்லை.
தற்போது அந்த கமிட்டியின் காலஅவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசு உத்தரவில், “அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக நிதித்துறை செயலாளர் சித்திக் (செலவினம்) தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு விதிக்கப்பட்ட அவகாசம் கடந்த 31ம் தேதி முடிவடைந்தது.
எனவே
இந்த குழுவின் கால அவகாசம் மேலும் 3 மாதம் (31-10-2018 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று கூறி உள்ளார்.
No comments
Post a Comment