Header Ads

Header ADS

ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை குறைப்பு : தமிழகத்திற்கு 3 விருதுகள் மட்டுமே வாய்ப்பு


 ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை
குறைப்பு : தமிழகத்திற்கு 3 விருதுகள் மட்டுமே வாய்ப்பு


 *ஆசிரியர்களுக்கான தேசிய விருது எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது


 *தேசிய அளவில் 45 விருதுகள் மட்டுமே வழங்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை முடிவு செய்துள்ளது. இதுவரை தமிழகத்துக்கு 23 விருதுகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி 3 விருதுகளுக்கு மட்டுமே கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன*

*மேலும் ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்குவதில், புதிய கட்டுப்பாடுகளை, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் இல்லாவிட்டால் விருது கிடையாது, சி.பி.எஸ்.., தவிர, மற்ற தனியார் பள்ளிகளுக்கும் விருது இல்லை என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது*

 *அதே போல இந்த ஆண்டு, தேசிய விருது பெறும் நடைமுறைகளில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன*




*அரசு மற்றும் அரசு உதவி பள்ளி ஆசிரியர்கள் மட்டும், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்*


 *தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.., பள்ளிகள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தமிழக பாடத்திட்டத்தில் உள்ள, சுயநிதி பள்ளிகளும், மெட்ரிக் பள்ளிகளும் விண்ணப்பிக்க முடியாது*

*விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் வகுப்புகளுக்கு ஒருநாள் கூட தவறாமல் சென்றிருக்க வேண்டும்*


*ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் தவறாமல் பங்கேற்றிருக்க வேண்டும். டியூஷன் என்ற, வணிக ரீதியான கற்பித்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கக் கூடாது என ஏராளமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.