Header Ads

Header ADS

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள விரிவுரையாளர், இளநிலை தொழில்நுட்ப அதிகாரி போன்ற 34 பணியிடங்கள்.-50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு



மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், விரிவுரையாளர், இளநிலை தொழில்நுட்ப அதிகாரி போன்ற பணிகளுக்கு 34 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உயிரியல், இயற்பியல், வேதியியல், மெட்டலர்ஜி, மரைன் என்ஜினீயர் உள்ளிட்ட அறிவியல், பொறியியல், தொழில்நுட்ப பட்டப்படிப்புகளை படித்தவர்கள், எம்.பி.பி.எஸ். படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
 
 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான, கல்வித் தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் ரூ.25 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 30-8-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.upsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.