Header Ads

Header ADS

11th maths video lesson:




11th maths ஒண்ணுமே புரியல.வேற group மாத்துங்க....


 
College இருக்குற கணக்கெல்லாம் eleventh stdலயே கொடுத்துருக்காங்க.ரெம்ப கஷ்டமாருக்கு....



பக்கத்து matriculation school படிக்கிற பிள்ளைங்க எல்லாம் வருஷத்துக்கு குறைஞ்சது 13000ரூபாய் கட்டி maths  tuition போறாங்க.என்னையும் சேத்து விடும்மா....



Neet,medical,cut off mark எடுக்க maths தான் முக்கியம்.அப்ப செலவழிச்சு அலையுறதுக்கு இப்பவே நல்ல home tuition arrange பண்ண வேண்டியது தான்...
 


Tution போக வழியில்ல.schoolல்ல முழுசும் சொல்லிக் கொடுக்கல.சொல்லிக் கொடுத்ததும் புரியல.என்ன பண்ணுறது...



இப்படி பல கேள்விகள் நம்ம பெற்றோர்களிடத்திலும்,மாணவர்களிடத்திலும்..



தொழில்நுட்ப அசுர வளர்ச்சிக்கும்,இன்றைய உலகின் நவீன மாற்றங்களுக்கும் ஏற்ப நம்மையும் தகவமைத்துக் கொள்ள வேண்டியதே அறிவார்ந்த பார்வை.


 
கணிதத்தைப் பொருத்த வரை conceptஐப் புரிந்து கொள்ளாது stepsகளை மனப்பாடம் செய்வதும்,செய்ய வைப்பதும் மிகப் பெரிய தவறு.


 
இந்த மனப்பாடக் கரையான்களுக்கு மருந்தடித்து அடிப்படையைக் கற்பிக்கும் வகையில் ஆழ உழுததே இந்தக் கணிதப் பாடம்.



ஆசிரியர்கள் முன்தயாரிப்பில்லாமல் வகுப்பில் பாடம் எடுக்க முடியாது.அதற்கு அவர்கள் தம்மையும் ஆட்படுத்தி, தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்.



ஆசிரியர்களானாலும் சரி,மாணவர்களானாலும் சரி கடினமான,கேட்கப்பட்ட கணக்குகளின் கேள்விகளைப் புரிந்து தீர்வு காண உதவி செய்யும் பொருட்டு 81 VIDEO LESSONS தயார் செய்யப் பட்டுள்ளது.கல்விப் புரட்சியில் தமிழக அரசின் SCERT யின் மாபெரும் முயற்சி இது.



கணக்கு புரியும் வரை பல தடவை பார்த்து அறிந்து கொள்ள முடியும்.TN SCERT என்ற You Tube Channelல் Upload செய்யப்பட்டுள்ளது.



விலை மதிப்பில்லாத இந்த அறிவுப் பெட்டகத்தை ஒவ்வொருவரும் அறியச் செய்வோம்.காசு கொடுத்துப் படிக்க இயலாத ஏழை,கிராமப்புற மாணவர்களுக்கு இப்படி ஒரு supporting material இருக்கு என்பதைத் தெரியப்படுத்துவோம்.

 

நல்லதை எடுத்துச் சொல்ல யாருமே இல்லை.தமிழ் வழி,ஆங்கில வழி என்று இரு மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இக்கணிதக் கல்விப் படைப்புகளை விளிம்பு நிலை வரை கொண்டு போய்ச் சேர்ப்பது நமது தார்மீகப் பொறுப்பும்,கடமையும்.



எனக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்னு skip பண்ணி கடந்து போயிராதீங்க. ஒவ்வொருத்தவங்களும் ஒரு share பண்ணுனாலே பட்டி தொட்டியெல்லாம் பரவீரும்.உங்களுக்கும் புண்ணியமாப் போகும்.நம்ம பிள்ளைங்க சிரமமும் குறையும்.செமையா,ஜாலியா படிச்சி பெரிய ஆளாயிருவாங்க.

 

செய்வீர்களா...?



அன்புடன்

அமலன் ஜெரோம்


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.