Header Ads

Header ADS

Scholarship பெற மாணவர்களை அழைக்கிறது தபால்துறை

கோவை:தபால்துறையின்,'தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா' திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகை பெற பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பள்ளி மாணவர்கள் மத்தியில் தபால்தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, 'தீன தயாள் ஸ்பர்ஷ்




யோஜனா' எனும் திட்டத்தை கடந்த நவ., மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன்கீழ் மாதந்தோறும், 500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் நிலையில், இந்தாண்டுக்கான ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்களுக்கு தபால்துறை அழைப்பு விடுத்துள்ளது.இதன்கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை சேர்ந்த ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.





60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினை சேர்ந்தவர்கள், 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு முதல் கட்டமாக, வினாடி-வினா, எழுத்துத்தேர்வு ஆக.,18ம் தேதி நடத்தப்படும். வெற்றி பெற்றவர்கள் ஸ்டாம்ப் தொடர்பான ஏதேனும் தலைப்பின் கீழ், 'philately project' சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 

மாணவர்களுக்கே மாதம், 500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாய் அவர்களுடைய சேமிப்பு கணக்கில் சேர்க்கப்படும்.தபால்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சேகரிப்பு கணக்கு துவங்க விரும்பும் பள்ளிகள் மற்றும் மாணவர்கள், தலைமை தபால் நிலையத்தை அணுகலாம்.

அல்லது, 0422 2305100 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.