Header Ads

Header ADS

உங்கள் PAN CARD பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..


பான் கார்டில் உள்ள எண்-எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடாகும்


. அதைத் தெரிந்து கொள்வோம்.

உதாரணத்துக்கு பான் கார்ட் எண் ADQGU123B என்று வைத்துக்கொள்வோம்.

முதல் 3 எழுத்துக்கள் வரிசை எண்களாகும்.

4வது எழுத்து தனிப்பட்ட நபரின் கார்டா அல்லது ஒரு தொழில் நிறுவனத்தின் கார்டா என்பதை குறிக்கிறது.
 
C - Company
P - Person
H - HUF(Hindu Undivided Family)
F - Firm
A - Association of Persons (AOP)
T - AOP (Trust)
B - Body of Individuals (BOI)
L - Local Authority
J - Artificial Juridical Person
G - Government

 5வது எழுத்து பான் அட்டை வைத்திருப்பவரின் கடைசி பெயரின் முதல் எழுத்தாகும்.

  அடுத்து வரும் எண்கள் வரிசை எண்களாகும். இது 0001ல் ஆரம்பித்து 9999 வரை செல்லும். கடைசி எழுத்தும் வரிசை எண் தொடர்புடையது தான்.

  மத்திய வருமான வரித்துறை அலுவலகம் மூலம், 2003 ஜூலை முதல் தேதிக்கு முன்பு வரை விநியோகிக்கப்பட்ட பான்கார்டுகளை தற்போதும் பயன்படுத்தலாம்.
 
  எனவே, புதிதாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

    கலர் ஃபோட்டோவுடன் கூடிய புதிய லேமினேட் கார்டை பெற வேண்டும் என விரும்பினால் மட்டும் புதிதாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்..

   இவ்வாறு பெறும் போது, ஏற்கனவே இருந்த எண்தான் ஒதுக்கப்படும். இதேபோல், பான் கார்டு தொலைந்து போனாலோ அல்லது ஏதாவது சேதமுற்றாலோ கூட விண்ணப்பித்து புதிய கார்டைப் பெற்றுக் கொள்ளலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.