Jio - இனி 1.5ஜிபிக்கு பதில் 3ஜிபி; 2ஜிபிக்கு பதில் 3.5ஜிபி; ஜியோவாசிகளுக்கு அடித்தது அதிர்ஷ்டம்
1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது..!
ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் ஒரு திட்டமாகும். அது ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது. இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே ரீசார்ஜ் செய்ய நீடிக்கும்.
எந்தெந்த திட்டங்கள்.?
இந்த
வாய்ப்பானது ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவு-நிலை திட்டமான ரூ.149/- தொடங்கி ரூ.799/- திட்டம் வரை அணுக கிடைக்கும். எடுத்துக்காட்டிற்கு ரூ.149/ திட்டமானது மொத்தம் 28 நாட்களுக்கு 1.5ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்தது. தற்போது ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இதன் வழியாகத்தான் ஜியோவின் 1 ஜிபி தரவு மதிப்பு ரூ.1.77/- ஆக குறைந்துள்ளது.
1.5 ஜிபிக்கு பதிலாக முறையே 3 ஜிபி.!
இருப்பினும், இது நிறுவனத்தின் ஒரு குறிப்பிட்ட கால வாய்ப்பாகும், அதாவது ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே - இந்த நன்மைகளை அடக்கிய - ரீசார்ஜ் செய்ய நீடிக்கும். வேறென்ன திட்டங்கள் இந்த திட்டத்தின் கீழ் கூடுதல் நன்மைகளை வழங்குகிறது என்று கேட்டால் நிறுவனத்தின், 1.5ஜிபி டேட்டா திட்டங்களான ரூ.149, ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.449/- ஆகியவைகள் தற்போது ரீசார்ஜ் செய்ய 3ஜிபி வழங்கும்.
2 ஜிபிக்கு பதிலாக முறையே 3.5 ஜிபி.!
மறுகையில், ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு தரும் ரூ.198, ரூ.398, ரூ.448 மற்றும் ரூ.498 திட்டங்கள் ஆனது தற்போது ரீசாயிஜ் செய்ய ஒரு நாளைக்கு 3.5 ஜிபி தரவும் வழங்கும். இதேபோல நாள் ஒன்றிக்கு 3ஜிபி வழங்கும் ரூ.299/- ஆனது (28 நாட்களுக்கு செல்லுபடியாகும்) தற்போது ரீசார்ஜ் செய்ய ஒரு நாளைக்கு 4.5 ஜிபி தரவை வழங்கும்.
4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி.!
அதிகபட்ச டேட்டா நன்மைகளை வழங்கும் திட்டங்களான ரூ.509 மற்றும் ரூ.799 திட்டம் இப்போது 4ஜிபி மற்றும் 5ஜிபிக்கு பதிலாக முறையே 5.5 ஜிபி மற்றும் 6.5 ஜிபி-ஐ வழங்கும். மேற்கூறப்பட்ட அனைத்து திட்டங்களின் செல்லுபடியாகும் காலத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதை குறிப்பு செய்யுங்கள்.
ரூ.100/-
கேஷ்பேக்.?!
இந்த
கூடுதல் டேட்டா நன்மைகள் தவிர்த்து, ஜியோ அதன் ரூ.300/-க்கும் மேற்பட்ட ரீசார்ஜ்ஜின் மீது ரூ.100/- கேஷ்பேக் வாய்ப்பையும், மற்றும் ரூ.300/-க்கு குறைவான விலை கொண்ட ரீசார்ஜ்களில் 20% தள்ளுபடியையும் அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பெற மைஜியோ பயன்பாட்டின் மூலம் மட்டுமே ரீசார்ஜ்கள் செய்யப்பட வேண்டும் என்பதும், பண பரிமாற்றம் ஆனது போன்பே (PhonePe) வழியாகத்தான் நடக்க வேண்டும் என்பதையும் குறிப்பு செய்யுங்கள்.
No comments
Post a Comment