Digital School Education
அரசு நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் வருகைப்பதிவு, பாடத்திட்ட செயல்பாடு, எமிஸ் இணையதளத்தில் விபரங்கள் பதிவிடுதல் என அனைத்தும்,
டேப்லெட் மூலம் மேற்கொள்ள, ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், அந்தந்த வட்டார மையங்களில் துவங்கியது.புதிய பாடத்திட்டத்தில், பாடத்திட்டம் சார்ந்த செயல்பாடுகள், கூடுதல் தகவல்களுக்கான வீடியோக்கள் பதிவிறக்க, 'க்யூ.ஆர்.,' கோடு கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, கோவை மாவட்டத்தில் உள்ள, 226 அரசு நடுநிலைப்பள்ளிகளுக்கு முதற்கட்டமாக டேப்லெட் கம்ப்யூட்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தும் விதம் குறித்து,ஆசிரியர்களுக்கு வட்டார வள மையங்களில் பயிற்சி துவங்கியது.
No comments
Post a Comment