இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 1, 2018

இன்டர்நெட் சென்டரில் ரெடியாகும் ஆசிரியர்களின் ஊதிய பட்டியல்: தடுக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி!


அரசு ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல்கள் தனியார் கணினி மையங்களில்தயாரிப்பது தடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர்
செங்கோட்டையன்தெரிவித்துள்ளார்.




 தமிழகத்தில் அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படித்து பொதுத் தேர்வு எழுதிய  மாணவ, மாணவியரின் விவரங்கள் தனியாருக்கு விற்கப்பட்ட சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த பரபரப்பான சூழல்நிலையில், ஆசிரியர்களின் ஊதியப் பட்டியல் (சம்பளம்) தனியார் கணினி மையங்களில் தயாரிக்கப்படுவது தெரியவந்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது, ஆசிரியர்களின் ஊதியப்பட்டியலும் தனியார் கணினி மையங்களில் ைவத்துதான் தயாரிக்கப்படுகிறது என்ற விவரம் தெரிந்து கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 3 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் ஊதியத்தில் மெத்தமான இருப்பது கவலை அளிக்கிறது. அதனால் இதுகுறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து பள்ளிக் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், ‘ஆசிரியர்களின் சம்பள பில்கள் ஒரு சில தனியார் கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மூலம் தயாரிக்கப்படுவதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. அதை தடுப்பதற்குரியநடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பள்ளிகளில் உள்ள கணினி இயக்குநர்கள் மூலம் இந்த பணிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதுஎன்றார்.

No comments: