தமிழக அரசின், "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" மூலம் ஒன்று அல்லது இரண்டு பெண்
குழந்தைகள் இருந்தால் உங்களுக்கு ரூ.50 ஆயிரம் கிடைக்கும். இந்த
திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேற்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "தமிழகத்தில் உள்ள பெண் குழந்தைகளை பாதுகாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் "பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்" அறிமுகப்படுத்தி செயல்படுத்தப்படுகிறது.
இரண்டு வகைகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தின் முதல் வகை, குடும்பத்தில் பெண் குழந்தை மட்டும் இருந்து பெற்றொர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால் அப்பெண் குழந்தை பெயரில் நிலையான வைப்புத் தொகை ரூ.50 ஆயிரம் தமிழநாடு மின் விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படும்.
இரண்டாவது வகை, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் 2-வது பெண் குழந்தை பிறந்த மூன்று ஆண்டுகளுக்குள் பெற்றோர் இருவரில் ஒருவர் கருத்தடை செய்திருந்தால் இரண்டு குழந்தைகளின் பெயரில் தலா ரூ.25 ஆயிரம் முதலீடு செய்யப்படும்.
அதன்படி, அக்குழந்தை 18 வயது பூர்த்தி அடைந்ததும், வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின்மூலம் பயன்பெற விரும்புவோர் குழந்தைப் பிறப்புச் சான்று, பெற்றோர் வயதுச் சான்று, குடும்ப நல அறுவைச் சிகிச்சை செய்த சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, ஆண் வாரிசு இல்லை என்று சான்று, சாதிச் சான்று, குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியரகத்தை அனுகவும்.
அங்கு மாவட்ட சமூக நல அலுவலகத்திலோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கும் சமூக நல விரிவாக்க அலுவலரிடமோ விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் அந்தச் செய்தி அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.
No comments
Post a Comment