Header Ads

Header ADS

அரசு பள்ளிகளில் சத்துணவு ஆய்வு செய்ய கண்காணிப்பு குழு


பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவு
குறித்து ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு

அமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், சத்துணவு, அங்கன்வாடி மையங்களில், தினமும் ஏதாவது ஒரு கலவை சாதம், முட்டை, குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் தரம் குறித்து, அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

அரசு முடிவு : இந்நிலையில், பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தை செம்மைப்படுத்தி, ஆய்வு செய்ய, மாவட்ட, ஒன்றிய அளவில், கண்காணிப்பு குழுக்களை அமைக்க, அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, மாவட்ட குழுவுக்கு, கலெக்டர் தலைவராக இருப்பார்.முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மருத்துவத் துறை இணை இயக்குனர், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனர், சமூகநல அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் உட்பட, 12 பேர், உறுப்பினர் செயலர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஒன்றிய அளவில், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், தலைமை ஆசிரியர், குழந்தை நல வளர்ச்சி அலுவலர், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் உட்பட, ஏழு பேர் குழுவில் இடம் பெறுவர்.


விசாரணை : குழுவினர், ஒவ்வொரு பள்ளியின் அடிப்படை தேவை குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். 90 நாட்களுக்கு ஒருமுறை கூடி, பள்ளியில் செயல்படுத்தப்படும் திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வேண்டும். ஏதேனும், இரு பள்ளிகளில் உணவு மாதிரிகளை எடுத்து, பாதுகாப்பு அலுவலர், ஆய்வு கூட்டங்களுக்கு கொண்டு வர வேண்டும்.ஏதேனும் பள்ளிகளில், தரமில்லாத உணவு தயாரித்திருப்பின், ஆய்வு கூட்டத்துக்கு பின், துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்படும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.