Header Ads

Header ADS

கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்


தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் தேசிய நுழைவுத் தேர்வு நடத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்பி ராஜேந்திரன், கணினி மூலம் நீட் தேர்வு நடத்துவதற்கு முன்னரான ஏற்பாடுகளைப் பற்றி கேள்வி எழுப்பினார். தேசிய தேர்வு முகமை நீட் நுழைவுத் தேர்வை கணினி மூலம் நடத்துவதற்கு முன்பு மாணவர்களுக்கு சிறப்பு கணினி பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். ராஜேந்திரனின் கேள்விக்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், வாரத்திற்கு 2 நாள் சனி மற்றும் ஞாயிறு நாட்களில் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான கணினி பயிற்சி ஐந்து மாதங்களுக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
 
கிராமப்புற மாணவர்கள் மிகவும் சிறந்தவர்கள் அவர்களுக்கு இந்த பயிற்சி போதுமானதாக இருக்கும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து கரூர் எம்பியும் லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசுகையில், தேசிய நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்களை தேர்வு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது என்று குற்றம் சாட்டிப் பேசினார். தொடர்ந்து பேசிய தம்பிதுரை மாணவர்கள் நுழைவு தேர்வில் மட்டும் கவனம் செலுத்துவதால் கல்வித்தரம் குறையும். மத்திய அரசு நடத்தும் 2 மணி நேர நுழைவுத் தேர்வுக்காக ஆண்டு முழுவதும் மாணவர்கள் நேரத்த செலவிடுதால் நிச்சயமாக கல்வித்தரம் குறையும் அதனால், பன்னிரண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தம்பிதுரை நீட் தேர்வு விவகாரத்தில், கிராமப்புற மாணவர்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. நாங்கள் தான் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறோம். மாநில அரசின் கல்வித் திட்டங்களில் மத்திய அரசு தலையிடக் கூடாது. மத்திய அரசின் இந்த செயல்பாட்டை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது என்று கூறினார். தம்பிதுரையின் குற்றச்சாட்டு பதிலளித்துப் பேசிய பிரகாஷ் ஜவடேகர், நீட் தேர்வு தமிழ் வினாத்தாள் மொழிபெயர்பில், தமிழக அரசு நியமித்த மொழிபெயர்ப்பாளர்களைக் கொண்டே நீட் வினாத்தாள் தயாரிக்கப்பட்டது. இந்த தவறு மீண்டும் நடைபெறாது என்று இரு தரப்பிலிருந்தும் பரஸ்பரம் 

ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மாநில அரசின் பாடத் திட்டத்தின்கீழ் 2 கோடி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதிலிருந்து 24 லட்சம் மட்டுமே தேசியத் தகுதித் தேர்வை எழுதுகின்றனர். இதர மாணவர்களுக்கான தேர்வை மாநில அரசுதான் நடத்துகிறது. அதனால், நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. அதனால், இதில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாது என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.