நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு - தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் வலியுறுத்தல்.
நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகம் வலியுறுத்தல்.
சேலம், ஜூலை 30: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின்தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழகத்தின் மாநில பொது குழு கூட்டம் நேற்று சேலத்தில் நடந்தது. மாநில தலைவர் ஜோஸ் டைட்டஸ் தலைமை வகித்தார். கழக நிறுவனர் திருமாவளவன் பேசினார். கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு தற்போது நடைமுறையில் இருந்து வரும் பங்களிப்பு புதிய ஓய்வூதிய முறையை கைவிட்டு, பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வரவேண்டும். 38 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் கழகத்தின் செயல்முறைக்கு அரசு ஏற்பு அளிக்க வேண்டும்.
2013ம் ஆண்டுக்கு முன் பணி நியமனம் பெற்ற அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை,
பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
மருத்துவக்கல்வி சேர்க்கைக்கான நீட் தேர்வு, ஆண்டுக்கு இருமுறை என்பதை கைவிட்டு ஒரே முறை நடத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், நிர்வாகிகள் மனோகரன், மரியதாசன், நற்குணம், செல்வராசு, சுப்பிரமணியன், ராஜசேகரன், சின்னப்பா, குமார், குணசேகரன், எழில்வாணன், அனுசுயா, பிரைட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Post a Comment