தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 'கியூஆர்' கோடுடன் அடையாள அட்டை வழங்கல்!
மாணவர்கள் கல்வி, தனித்திறன் நடவடிக்கை குறித்து, பெற்றோர் தெரிந்து கொள்ளும் வகையில், 'கியூஆர்' கோடு எண்ணுடன் கூடிய அடையாள அட்டை
வழங்கப்பட்டது.
கரூர் அருகே, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மனோகரன், வெங்கடேஷ் ஆகியோர், பள்ளிக் கல்வித்துறை மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனம் இணைந்து வழங்கிய ஐ.சி.டி., இன்பர்மேஷன் கான்டாக்ட் டெக்னாலஜி என்னும் பயிற்சியில் பங்கேற்றனர். இதையடுத்து, விரைவாக தகவல் பெற பயன்படும் 'கியூஆர்' கோடு தயாரித்து, பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் இணைத்துள்ளனர்.
மாணவர்களின் கல்வி, அறிவியல், கணிதம், விளையாட்டு, தனித்திறன் ஆகியவற்றை இணைய தளத்தில் பதிவு செய்து, 'கியூஆர்' கோடு அட்டை மூலம் தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அடையாள அட்டையை, முதல் கட்டமாக, 26 மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர் தர்மலிங்கம் வழங்கினார்.
இதன் மூலம் மாணவர்களின் பெற்றோர், மாணவர்களின் தகவல்களை மொபைல் போன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
No comments
Post a Comment