டெட் வெயிட்டேஜ் கேன்சல் ஆகுமா ? போஸ்டிங் உண்டா இல்லையா? Article by-Mr.அல்லா பக்ஷ்
டெட்
வெயிட்டேஜ் கேன்சல் ஆகுமா என்ற எதிர்பார்ப்புடன் பலர்... கேன்சல் ஆக கூடாது என்ற மனநிலையில் சிலர்...
போஸ்டிங் உண்டா இல்லையா? காலி இடங்கள் பற்றி முதல்வரின் தனி பிரிவு சொன்ன செய்திகள் உண்மையா? இல்லையா? நடந்து முடிந்த surplus ஆசிரியர்களின் கவுன்சிலிங் பார்த்து பயந்து போன நிலையில் பலர்....
Annual
Planner அடிப்படையில் இந்த மாத முதல் வாரத்தில் வர வேண்டிய டெட் தேர்வு அறிவிப்பு எங்கே என்று பலரும் தேடிக் கொண்டு இருக்க....
நடந்து முடிந்த 2013,2017 டெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் நியமன தேர்வு என்று சொல்றாங்களே அது எப்படி வரும்ன்னு எதிர்பார்ப்பில் உள்ள நிலை மறுபுறும்...
இவர்களுக்கு இடையே முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடம் இருக்கும் சூழ்நிலையில் தேர்வு வரலாம் என்று துறை சம்பந்தப்பட்ட அமைச்சரே சொன்ன பிறகும் இன்னும் அறிவிப்பு வரவில்லை என்ற தீவிர எதிர்பார்ப்பில் பலர் மறுபுறம்...
பாலிடெக்னிக் தேர்வு என்னாச்சு என்ற குரல் எழுந்து கொண்டு இருக்கும் நிலையில்...
டிஆர்பி தனது முந்தைய கடமையை முடிக்க வேண்டிய நிலைக்கு வந்து உள்ளது. அதனால் தான் இன்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் தாள் ஒன்று சம்பந்தப்பட்ட தன் பணியை முடித்து உள்ளது.
இனி
தேர்வு அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக வரலாம்.... கனவுகள் பூர்த்தியாகலாம்... சிறப்பு ஆசிரியர் தேர்வு கலந்தாய்வு தேதி வெளியாகலாம்.... இனி வரப்போகும் நாட்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நாட்களாகவே அமையும் என நம்புகிறேன்.
ஏகப்பட்ட குழப்பங்களும், கற்பனைகளும், கனவுகளையும் உங்கள் மனதில் விதைத்துள்ளனர்.
No comments
Post a Comment