வரலாற்றில் இன்று 24.07.2018 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, July 24, 2018

வரலாற்றில் இன்று 24.07.2018


சூலை 24 (July 24) கிரிகோரியன் ஆண்டின் 205 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 206 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 160 நாட்கள்
உள்ளன.

நிகழ்வுகள்

1505 – போர்த்துக்கீச நடுகாண் பயணிகள் இந்தியாவுக்கு செல்லும் வழியில் கிழக்கு ஆபிரிக்காவில் கில்வா என்ற இடத்தைத் தாக்கி அதன் மன்னனை திறை செலுத்தாத காரணத்துக்காகக் கொன்றனர்.
1567 – இசுக்காட்லாந்தின் முதலாம் மேரி பதவியில் இருந்து அகற்றப்பட்டாள். அவளது 1 வயது மகன் ஜேம்ஸ் மன்னனாக்கப்பட்டான்.
1911 – பெருவில் மச்சு பிச்சு என்ற 15ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டையை அமெரிக்க நாடுகாண் பயணி ஹிராம் பிங்கம் கண்டுபிடித்தார். இது பழைய இன்கா பேரரசின் தொலைந்த நகரம் எனக் கருதப்பட்டது.
1915 – சிக்காகோவில் ஈஸ்ட்லாண்ட் என்ற பயணிகள் கப்பல் மூழ்கியதில் 845 பேர் உயிரிழந்தனர்.
1923 – கிரேக்கம், பல்கேரியா மற்றும் முதலாம் உலகப் போரில் பங்குபற்றிய நாடுகள் சுவிட்சர்லாந்தில் கூடி புதிய துருக்கியின் எல்லைகளை நிர்ணயிக்கும் உடன்பாட்டில் கைச்சாத்திட்டனர்.
1924 – பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) பாரிசில் அமைக்கப்பட்டது.
1931 – பென்சில்வேனியாவில் முதியோர் இல்லம் ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1943 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, கனேடிய விமானங்கள் ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகரில் குண்டுவீச்சுத் தாக்குதலை ஆரம்பித்தன. நவம்பர் மாத இறுதி வரை இடம்பெற்ற இத்தாக்குதல்களில் 30,000 பேர் கொல்லப்பட்டனர்.

1969 – அப்பல்லோ 11 பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது.
1974 – சைப்பிரசில் துருக்கியரின் படையெடுப்பின் பின்னர் சைப்பிரசின் இராணுவ அரசு கவிழ்க்கப்பட்டு, நாட்டில் மக்களாட்சி மீளமைக்கப்பட்டது.
1977 – லிபியாவுக்கும் எகிப்துக்கும் இடையே இடம்பெற்ற 4-நாள் போர் முடிவுக்கு வந்தது.
1982 – ஜப்பானில், நாகசாகியில் பெரும் வெள்ளம், மற்றும் மண்சரிவினால் 299 பேர்ர் கொல்லப்பட்டனர்.
1991 – இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது.
2001 – கட்டுநாயக்கா விமானப் படைத் தளத் தாக்குதல்: பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுதலைப் புலிகளிளால் தாக்கப்பட்டதில் பல விமானங்கள் அழிக்கப்பட்டன.
2007 – லிபியாவில் 400 க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்..வி. கிருமிகளைப் பரப்பியதாக எழுந்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 பல்கேரியத் தாதிகளையும் பாலஸ்தீன மருத்துவர் ஒருவரையும் லிபிய அரசு விடுதலை செய்தது.
 
பிறப்புகள்

1802 – அலெக்சாந்தர் டுமாஸ், பிரெஞ்சு எழுத்தாளர் (. 1870)
1932 – தாமரைத்தீவான், ஈழத்து எழுத்தாளார்
1963 – கார்ல் மலோன், அமெரிக்க கூடைப்பந்து வீரர்
1953 – ஸ்ரீவித்யா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (. 2006)

இறப்புகள்
 
1848 – மார்ட்டின் வான் பியூரன், ஐக்கிய அமெரிக்காவின் 8வது குடியரசுத் தலைவர் (பி. 1782)
1974 – ஜேம்ஸ் சாட்விக், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1891).

சிறப்பு நாள்

வனுவாட்டுசிறுவர் நாள்

No comments: