தமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல் கல்லூரிகள்
தமிழகத்தில் மொத்தம் 11 போலி பொறியியல்
கல்லூரிகள் உள்ளதாக மத்திய அமைச்சர் சத்தியபால் சிங் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்தியபால் சிங், நாடு முழுவதும் 277 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அதிகபட்சமாக டெல்லியில் 66 கல்லூரிகள் உள்ளன. இதில் தமிழகத்தில் 11 போலி பொறியியல் கல்லூரிகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த போலி பல்கலைக்கழகம், கல்லூரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க யுஜிசிக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, "நீட் தேர்வை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை அமைப்பதற்குத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. வேறு எந்த மாநிலமும் தேசிய தேர்வு முகமை அமைக்க எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
No comments
Post a Comment