Header Ads

Header ADS

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2018


திருக்குறள்


புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.





விளக்கம்:

கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில் வேறொன்றுமாகப் புறங்கூறிப் பொய்மையாக நடந்து உயிர் வாழ்வதைவிட இறந்து போவது அறநூல்கள் கூறும் உயர்வைத்தரும்.


11111111111111111111111111111111111111111


பழமொழி

Birds of a feather flock together

இனம் இனத்தைச் சேரும்.




பொன்மொழி

நமக்கு வானம் என்றுமே எல்லையற்றது.
நாம் தைரியத்துடன் போராடி முன்னேறினால் விண்மீன்களை அடையலாம்.

---- இந்திரா காந்தி

இரண்டொழுக்க பண்பாடு

1.இயலாதோரைப் பார்த்து ஏளனம் செய்யாமல், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்.

2. எதையும் மூடநம்பிக்கையுடன் ஏற்காமல், அறிவியல் மனப்பான்மையுடன் ஆராய்வேன்.




பொதுஅறிவு

1.தமிழில் எழுதப்பட்ட முதல் நாவலின் ஆசிரியர் யார்?

 வேதநாயகம் பிள்ளை (பிரதாபமுதலியார் சரித்திரம் )   

 2.இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின்(ISRO) தற்போதைய தலைவர் யார் ?

 திரு.கே.சிவன்




English words and. Meanings

Continue-------தொடர்ந்து
Compulsory---கட்டாயம்
Culprit.      -----குற்றவாளி
Crimes.     -----குற்றங்கள்
Choice.      -----தேர்ந்தெடு

 


நீதிக்கதை

பாட்டிக்கு வந்த அன்புக் கடிதம் - விழியன்*

தபால்காரர் மணி பள்ளிக்குள் தன் சைக்கிளை தள்ளிக்கொண்டு நுழைந்தார். அந்த பகுதிக்கு புதிதாக இன்று தான் பணியில் சேர்ந்துள்ளார் மணி. எதிர்பட்ட சிறுவனிடம்எச்.எம் அறை எங்க தம்பி இருக்குஎன்று விசாரித்தார். அவன் ஒரு திசையில் கைகாட்டிவிட்டு குடுகுடுவென கழிவறை என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்துவிட்டான். சிரித்தபடியே மணிதலைமை ஆசிரியர்என்று எழுதி இருந்த அறைக்குள் நுழைந்தார். தன்னை புதிய தபால்காரர் என்று அறிமுகம் செய்துகொண்டார் மணி. பள்ளிக்கு வந்திருந்த கடிதங்களையும், சிறுவர் இதழ்கள் சிலவற்றையும் கொடுத்தார்.

அம்மா, இந்த பள்ளியில நாராயணின்னு யாராச்சும் இருக்காங்களா? நாராயணி, புளியமர ஸ்கூல்ன்னு போட்டு ஒரு கடிதம் வந்திருக்கு.”

தலைமை ஆசிரியை வேணி கண்ணாடியை ஒழுங்கு செய்துஆமாம் நாராயணின்னு ஒருத்தங்க இருக்காங்க. அவங்களுக்கு கடிதமா?”

ஆமாம் என்று உறுதிபடுத்தி யார் அவர்? மாணவியா ஆசிரியரா என்று கேட்டார். என்னோட வாங்க அவங்க கிட்ட நீங்களே கொடுத்திடுங்க என்று தபால்காரரை அழைத்துக்கொண்டு அறையைவிட்டு வெளியே வந்தார். நாராயணியை பற்றி சொல்ல ஆரம்பித்தார் வேணிஅவங்க இந்த பள்ளியில் ஆசிரியரும் இல்ல, மாணவரும் இல்ல. எந்த ரெக்கார்ட்டிலும் இல்லை. சில வருஷம் முன்னர் அவங்களா ஒரு நாள் வந்தாங்க. பசங்களோட உட்காந்துக்கறேன்னு சொன்னாங்க. அப்புறம் தினமும் பசங்க வருவதற்கு முன்னாடி வந்திடுவாங்க, பள்ளியை பூட்டும்போது கிளம்புவாங்க. எங்கிருந்து வர்ராங்கன்னு கூட தெரியாது. யாராச்சும் ஆசிரியர் வரலைன்னா வகுப்பை பார்த்துப்பாங்க. ஏதாச்சும் கதை சொல்லுவாங்க. இல்லை அமைதியா படிங்கன்னு வகுப்பை கட்டுப்பாட்டில் வெச்சுப்பாங்க”. நாராயணி அம்மாவிற்கு இத்தனை வருடத்தில் இது தான் முதல் கடிதம். அதனால் தலைமை ஆசிரியர் வேணி  அந்த கடிதத்தை நேராக தபால்காரரே கொடுத்தால் நன்றாக இருக்கும் என அழைத்துச்சென்றார்.
புளியமரத்தின் நிழலில் நாராயணி அமர்ந்திருந்தார். ”நாராயணிம்மா உங்களுக்கு லெட்டர் வந்திருக்குஎன்று அழைத்தார் தலைமை ஆசிரியர். அப்போது தான் யாரிடம் இருந்து வந்தது என்ற கேள்வி எழுந்தது. மணியிடம் யாரிடம் இருந்து கடிதம் என்று கேட்டார். “பேரழகன் , மதுரைன்னு எழுதி இருக்கு என்றார் மணி.

பேரகழன் என்ற பெயர் கேட்டதும் பழைய நினைவுகளில் மூழ்கினார் வேணி. பேரழகன் இதே பள்ளியில் மூன்று வருடங்கள் முன்னர்வரை படித்தான். நாராயணி அம்மாவிடம் தான் முழு நேரம் இருப்பான். அவன் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தை. அவனைக் கண்டு பள்ளி முதலில் அஞ்சியது. ஆனால் நாராயணி அம்மா எல்லாவற்றையும் மாற்றினார். அவன் மீது அன்பு பொழிந்தார். எந்நேரமும் அவனை கவனித்துக்கொண்டார். பேரழகன் அன்பானவன். பள்ளியே அவனைக் கொண்டாடியது. கேட்டதை அப்படியே பாடக்கூடியவன். ஆனால் அவனுடைய அப்பாவிற்கு வேலை மாற்றம் கிடைத்ததால் மதுரைக்கு சென்றுவிட்டார்கள். அவன் தான் கடிதம் போட்டிருக்க வேண்டும். எழுத எல்லாம் கற்றுக்கொண்டானா பரவாயில்லையே என்று நினைத்தார் வேணி.

என்ன எச்.எம் அம்மா கூப்பிட்டீங்களாஎன்று அருகே வந்தார் நாராயணி பாட்டி.

மணி கடிதத்தை நாராயணி அம்மாவிடம் கொடுத்தார். அவர் கடிதத்தை பிரித்து பார்த்தார். கேவி கேவி அழ ஆரம்பித்தார். மணி அந்த கடிதத்தை வாங்கினார். ஆனால் அதில் எந்த எழுத்தும் இருக்கவில்லை. வேணி அம்மாவிடம் கடிதத்தை காட்டிஇங்க நாலு ஐந்து கோடுகளும் கிறுக்கலும் தான் இருக்கு. என்ன எழுதி இருக்குங்க மேடம்?”

பேரழகனுக்கும் நாராயணி அம்மாவிற்கும் மட்டுமே புரிந்த மொழி அது. அவர்களிடமே கேளுங்கஎன்றார் வேணி.

மணி என்ன எழுதி இருக்கு என்று கேட்பதற்குள் நாராயணி பாட்டி அழுவதை பார்த்து இடைவேளைக்கு வெளியே வந்த குழந்தைகள் சூழந்துகொண்டார்கள்.
இதில் என்ன இருக்கு நாராயணி அம்மா?” என்று கேட்டார்.

அந்த புள்ளஅம்மா நல்லா இருக்கீங்களா? ஒழுங்கா சாப்பிட்றீங்களான்னு எழுதி இருக்குஎன்று சொல்லிவிட்டு மீண்டும் அழ ஆரம்பித்தார். பாட்டியை குழந்தைகள் சமாதானம் செய்தனர்.

அந்த காட்சியை பார்த்தபடியே மிகுந்த மன நிறைவுடன் மணி பள்ளியைவிட்டு வெளியேறினார்.

- *விழியன்*



இன்றைய செய்திகள்

01.08 .2018

* சென்னையில் பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் மெட்ரோ ரயில் நிலையங்கள் என்ற பெருமையை ஷெனாய் நகர் மற்றும் கோயம்பேடு ரயில் நிலையங்கள் பெற உள்ளன.

* அமெரிக்காவில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தேசியக் குழுவுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீமா நந்தா என்பவர் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

* அறிவியல் திறனறி தேர்வுக்கு மாணவர்கள் செப்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இந்தியா -  நியூஸிலாந்துஇரு நாடுகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடருக்கான அட்டவணை  வெளியிடப்பட்டுள்ளது.

* 1000 வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடி வரும் நிலையில் இதுவரை நடைபெற்ற 999 டெஸ்ட் போட்டிகளிலிருந்து சிறந்த இங்கிலாந்து டெஸ்ட் XI பட்டியலை வெளியிட்டுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் சங்கம்.





Today's Headlines

 🌸 Women's Kajal shows up as tumor in scan report .In the first result,thr examining doctor noticed a lesson on the 34 -years old women's left eyeball. However, this was visible in only a few images, prompting the doctor to do a second scan🌹

🌸Coimbatore: Weeks after obtaining licence from the Coconut development board. coconut producer companies have started production and sale of Neera and value -added products in the district🌹

🌸 Perambalur District :Techies on a mission to grow Palm trees. The drastic drop in the number of Palmyra trees in Perambalur, make professionals take up the conservation drive🌹
🌸 Idukki: The chief engineer of Kerala State Electricity Board , Bibin Joseph informed that water level in the Idukki dam reached 2395 feet at 9 p.m. on Monday ,This means the Alert code has changed to orange🌹

🌸 Hyderabad: Indian shutlers tasted success on the opening day of
 BWF world championship in Nanjing on Monday 🌹💐💐💐🏆.

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.