பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் பெற என்ன செய்யணும் ? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, January 10, 2021

பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் பெற என்ன செய்யணும் ?



பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் பெயர் நோக்கம் உதவி தொகை விவரம் தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் இணைக்க வேண்டிய சான்றுகள் அணுக வேண்டிய அலுவலர்

திட்டத்தின் பெயர் சிவகாமி அம்மையார் நினைவு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் ஒரு பெண் குழந்தைக்கான திட்டம் 2 பெண் குழந்தைகளுக்கான திட்டம்

திட்டத்தின் நோக்கம்

குடும்பக்கட்டுப்பாட்டை ஊக்குவித்தல் பெண் சிசு வதையை ஒழித்தல் ஏழை குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்குப் நல்வாழ்வு அளித்தல் பெண் குழந்தையின் மதிப்பை உயர்த்துதல்

உதவித் தொகை விபரம் 

திட்டம் 1

 குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை எனில் 50,000 அதற்கான காலம் வரை வைப்புத்தொகை குழந்தையின் பெயரில் வைக்கப்படும் வழங்கப்படும்.

திட்டம்

குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் எனில் ஒவ்வொரு பெண் குழந்தைகளுக்கும் தலா ரூபாய் 25 ஆயிரம் நிலை வைப்பு தொகை வழங்கப்படும் .

மேலும் இத்திட்டத்தில் சேரும் குழந்தைக்கு ஆண்டு தோறும் கிடைக்கும். வட்டியை வைப்புத்தொகை வழங்கப்பட்ட 6 ஆம் ஆண்டிலிருந்து இருபதாம் ஆண்டு வரை கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.


தகுதிகள் மற்றும் நிபந்தனைகள் 

*ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும் 

*ஆண் குழந்தை இருத்தல் கூடாது பின்னாளில் ஆண் குழந்தையை தத்து எடுக்கவும் கூடாது 

*பெற்றோர்களில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும்

*ஒரு பெண் குழந்தை எனில் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்துக்கு குறைவாகவும் இரண்டு பெண் குழந்தைகள் எனில் ஆண்டு வருமானம் 24 ஆயிரத்துக்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும் 

*பயனடையும் குழந்தை மூன்று வயது நிறைவடைவதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.


இணைக்க வேண்டிய சான்றுகள்

குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் 

வருமானச் சான்று இருப்பிடச் சான்று

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான சான்று

சாதி சான்று

பெற்றோரின் வயது சான்று 

ஆண் வாரிசு இல்லை என்பதற்கான சான்று 

குடும்ப அட்டை நகல் குடும்ப புகைப்படம்


வழங்கப்படுவதற்கான கால அளவு 


நிலை வைப்புத் தொகையின் 20 ஆம் ஆண்டின் முடிவில் மீதமுள்ள வட்டியுடன் சேர்த்து முதிர்வு தொகை வழங்கப்படும்


அணுக வேண்டிய அலுவலர்

மாவட்ட சமூகநல அலுவலர் ,

மாவட்ட திட்ட அலுவலர் அலுவலர்கள் 

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம்

குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் 

விரிவாக்க அலுவலர்கள் சமூகநலம் ஊர் நல அலுவலர்கள் 

இத்திட்டத்திற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் சமூக நல அலுவலகம் மற்றும் வீடு அலுவலகங்களில் கிடைக்கும் நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை அதே அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.

SOURCE-

CLICK HERE - SOURCE -1

CLICK HERE- SOURCE- 2

CLICK HERE TO VIEW VIDEO

2 comments:

Unknown said...

2021. இந்த காலகட்டத்தில், ஆண்டு வருமானம் 50000 மற்றும் 24000 என நிர்ணயம் செய்வது சரியானதாக இருக்குமா? என பரிசீலிக்கவும். நன்றி

tamnewsteachers.blogspot.com said...

S SIR...GOOD QUESTION