இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு போதிக்க மாற்றம் செய்யப் படுவதை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, January 11, 2019

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு போதிக்க மாற்றம் செய்யப் படுவதை எதிர்த்து வழக்குத் தொடர முடிவு



இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு போதிக்க மாற்றம் செய்யப் படுவதை எதிர்த்து வழக்குத் தொடர தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவு
இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடியில் புதிதாக தொடங்கப்பட இருக்கும் எல்கேஜி யூகேஜி வகுப்புகளுக்கு மாற்றம் செய்வதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ஏற்கனவே தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தது.

மேலும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மூலம் நர்சரி பள்ளிகளுக்கு போதிப்பதற்காக ஒரு வருட பட்டய பயிற்சி அளிக்கப்பட்டு ஏராளமானோர் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் நிலையில் அவர்களை பணியமர்த்துவது சரி என அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி யோசனையும் தெரிவித்திருந்தது
 
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பணிக்கு மாற்றுவதிலேயே குறியாக இருக்கும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறது.

மேலும் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி பள்ளிகளுக்கு மாற்றுவதை தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுவது என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முடிவாற்றியுள்ளது.
பொங்கல் பண்டிகை முடிந்ததும் இது சார்பான வழக்கை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்
செ. முத்துசாமி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர்.

No comments: