வாசிப்புத்திறன் குறித்த அறிக்கையில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பம்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 22, 2018

வாசிப்புத்திறன் குறித்த அறிக்கையில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பம்!


மதுரையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவர்களின் எழுதும் மற்றும் வாசிப்பு திறன் குறித்த அறிக்கைகளில் முரண்பட்ட தகவலால் கல்வித்துறையினர் குழப்பத்தில் உள்ளனர்.
 

இம்மாவட்டத்தில் 6, 7, 8ம் வகுப்பு மாணவரின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு, எழுதுதல் மற்றும் அடிப்படை கணித அறிவு திறன் குறித்து மாதந்தோறும் முதன்மை கல்வி அலுவலருக்கு தலைமையாசிரியர்கள் அறிக்கை(எம்.ஆர்.,) தாக்கல் செய்ய வேண்டும்.


 இதுகுறித்து ஆசிரியர் பயிற்றுனர்களும் மாணவர்களுக்கு தேர்வு வைத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சராசரி, சராசரிக்கு மேல் மற்றும் சராசரிக்கு கீழ் என மூன்று நிலைகளில் விவரம் தெரிவிக்க வேண்டும்.


ஜூன், ஜூலை அறிக்கைகளில் சராசரிக்கு கீழ் (அதாவது எழுத படிக்க தெரியாத மாணவர்) நிலையில் தலைமையாசிரியர்கள் அளித்த அறிக்கையில் 17 சதவீதம் எனவும், ஆசிரியர் பயிற்றுனர் அறிக்கையில் 32 சதவீதம் எனவும் உள்ளது. முரண்பட்ட இந்த அறிக்கைகளால் கல்வித்துறையினர் குழப்பமடைந்துள்ளனர்.


அதிகாரி ஒருவர் கூறுகையில், "சில சதவீதம் வித்தியாசம் இருக்கலாம்.


அதிகபட்சமாக 15 சதவீதம் வித்தியாசம் உள்ளது. உண்மையான விவரம் சமர்ப்பிக்க சி..., கோபிதாஸ் உத்தரவிட்டுள்ளார்," என்றார்.

No comments: