ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, August 8, 2018

ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே.. ஸ்டாலினின் உருக்கமான கடிதம்


ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே - ஸ்டாலின் சென்னை: எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன், ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே என்று திமுக செயல்
தலைவர் ஸ்டாலின் டிவிட்டரில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி குறித்து ஸ்டாலின் டிவிட் செய்து இருக்கிறார். அதில் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அகில், எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு செல்லும் என் ஆருயிர் தலைவரே, இம்முறை ஏன் சொல்லாமல் சென்றீர்கள்? என் உணர்வை, உடலை, உயிரை இதயத்தில் இரண்டரக் கலந்துவிட்ட தலைவா, எங்களை எல்லாம் இங்கேயே ஏங்க விட்டு சென்றீர்கள். ''ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ இங்கே ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறான் என்று நினைவிடத்தில் எழுத வேண்டும் என்று 33 வருடத்திற்கு முன்பே எழுதினீர்கள். இதோ இந்த தமிழ் சமூகத்திற்காக இடையராது உழைத்து போதும் என்று எங்கே சென்று விட்டீர்களா? 95 வயதில் 80 ஆண்டு பொது வாழ்வுடன் சளைக்காமல் ஓடி, ''நாம் தாண்டிய உயரத்தை யார் தாண்டுவார்கள் பார்ப்போம்'' என்று போட்டி வைத்துவிட்டு மறைந்து காத்தருகிறீர்களா? திருவாரூர் மண்ணில் உங்கள் 65வந்து பிறந்த நாளாம் சூன் 3ஆம் நாள் நான் பேசும் போது, ''உங்கள் சக்தியில் பாதியை தாருங்கள்'' என்றேன். அந்த சக்தியையும், பேரறிஞர் அண்ணாவிடம் நீங்கள் இரவலாக பெற்ற இதயத்தையும் யாசிக்கிறேன், தருவீர்களா தலைவரே! அந்த கொடையோடு, இன்னும் நிறைவேறாத உங்கள் கனவுகளையும், இலட்சியங்களையும் வென்று காட்டுவோம்! கோடான கோடி உடன்பிறப்புகள் இதயத்திலிருந்து ஒரு வேண்டுகோள்...ஒரே ஒரு முறை.. ''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே" என்று சொல்லுங்கள் தலைவரே! அது ஒரு நூறாண்டு எங்களை இனமொழி உணர்வோடு இயங்க வைத்திடுமே! ''அப்பா அப்பா'' என்பதை விட ''தலைவரே தலைவரே'' என நான் உச்சரித்துதான் என் வாழ்நாளில் அதிகம். அதனால் ஒரே ஒரு முறை, இப்போது ''அப்பா'' என்று அழைத்துக் கொள்ளட்டுமா தலைவரே? கண்ணீருடன் ஸ்டாலின் என்று முடியும் இந்த உருக்கமான கடிதத்தில், எப்போதும் தலைவர் என்றே அழைப்பேன், ஒருமுறை இப்போதாவது அப்பா என்று அழைக்கட்டுமா தலைவரே சோகமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த கடிதம் திமுக தொண்டர்களை கலங்கடித்துள்ளது.

 MK Stalin writes a heart whelming letter to his late father Karunanidhi


No comments: