தொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 6, 2018

தொடக்க கல்வி அதிகாரி பதவியில் மாற்றம்


*💎கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியை,
வட்டார கல்வி அதிகாரியாக மாற்றி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது*


*💎பள்ளி கல்வித்துறையில், பல அதிகாரிகள் பணியிடங்களை மாற்றியமைத்து, சமீபத்தில், தமிழக அரசு உத்தரவிட்டது. இதன்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளின் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டது*


 *💎தொடக்க கல்வி, ஆங்கிலோ இந்தியன், மெட்ரிக் பள்ளிகளுக்கான, மாவட்ட அதிகாரிகள் பதவிகலைக்கப்பட்டது*


*💎உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள், வட்டார கல்வி அதிகாரிகளாக மாற்றப்பட்டன. ஆனால், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பணியிடங்கள் கலைக்கப்படாமல் இருந்தன*

 


*💎அரசாணையில், அவர்களின் பதவி இல்லாததால், கருவூலத்துறையில், உதவி தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலைஏற்பட்டது*


*💎இதையடுத்து, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் பதவியும், வட்டார கல்வி அதிகாரிகள் பதவிக்கு நிகரானது என, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்*

No comments: