பள்ளிகளில் பயிலும் 1 லட்சம் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, August 6, 2018

பள்ளிகளில் பயிலும் 1 லட்சம் மாணவர்களுக்கு படிப்பு உதவித் தொகை


*🔰தமிழக சிறுபான்மையினர் நல இயக்ககம்
வெளியிட்டுள்ள அறிக்கை*

*🔰அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், மத்திய, மாநில அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளிப்படிப்பு கல்வி


உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்*


*🔰2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இஸ்லாமியர் 54ஆயிரத்து 259, கிறிஸ்தவர் 56 ஆயிரத்து 682, சீக்கியர் 187, பவுத்தர் 144, ஜெயின் 1145, பார்சி 2 என மொத்தம் 1 லட்சத்து 12ஆயிரத்து 419 பேருக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது*


*🔰தாங்கள் படித்த வகுப்பின் முந்தைய ஆண்டில் 50 சதவீதத்துக்கு குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*

No comments: