நாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் நல்ல நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை அறிந்துகொள்ள புதிய மொபைல் ஆப்ஸ் வெளியீடு [ Chkfake Mobile App ] - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 21, 2019

நாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் நல்ல நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை அறிந்துகொள்ள புதிய மொபைல் ஆப்ஸ் வெளியீடு [ Chkfake Mobile App ]



நாம் கையில் வைத்துள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் நல்ல நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை அறிந்துகொள்ள புதிய மொபைல் ஆப்ஸ் புழக்கத்திற்கு வந்துவிட்டது. Chkfake ஆப்ஸை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து மிக எளிமையாக சரிபார்க்க முடியும்

உயர் மதிப்புடைய நோட்டுக்கள் தான் கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க மிக எளிதாக உள்ளதை அறிந்துகொண்ட மோடி அரசு கடந்த 2016ஆம் ஆண்டின் இறுதியில் உயர் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை முற்றிலும் தடை செய்தது. அதற்கு பதிலாக மாறுபட்ட வடிவத்தில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திற்கு விட்டது.
 
புதிதாக புழக்கத்திற்கு விடப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை அவ்வளவு எளிதில் காப்பியடித்து கள்ள நோட்டுக்கள் அச்சடிக்க முடியாது என்றும் புதிய ரூபாய் நோட்டுக்களில் எல்லாம் புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன என்றும் மோடி அரசு மார் தட்டிக்கொண்டது. ஆனால் புதிய ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்பட்ட ஒரு வாரத்திலேயே சில விஷமிகள், 2000 ரூபாய் நோட்டுக்களை போலியாக அச்சடித்து புழக்கத்திற்கு விட்டனர்.


கள்ள நோட்டுக்கள் பெரும்பாலும் ஏடிஎம்களிலும், சாதாரண பெட்டிக்கடைகள், பெட்ரோல் பங்க்குகள் மற்றும் மதுபானக்கடைகளில்தான் அதிக அளவில் புழங்குவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. நடப்பு 2018-19ஆம் ஆண்டில் இதுவரையில் சுமார் 5,22,783 நோட்டுக்கள் கள்ள நோட்டுக்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்துவது அசல் நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறிவருகின்றனர். ஒரு சில நிறுவனங்களும் வங்கிகள் மட்டுமே கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகின்றன. இவற்றின் விலை அதிகமாதலால் சாதாரண மக்கள் இவற்றைப் பயன்படுத்துவது என்பது முடியாத காரியம். பொதுமக்களின் ஏக்கத்தை போக்க தற்போது கள்ள நோட்டுக்களை கண்டுபிடிக்க ஸ்மார்ட் ஃபோன்களில் புதிய மொபைல் ஆப்ஸ் வந்து விட்டது.

கூகுள் ப்ளே ஸ்டோர்ஸில் உள்ள Chkfake என்ற ஆப்ஸை பதிவிறக்கம் செய்து அதன்மூலம் நாம் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுக்களா அல்லது கள்ள நோட்டுக்களா என்பதை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

Chkfake ஆப்ஸை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்த உடன், நீங்கள் கையில் வைத்திருக்கும் ரூபாய் நோட்டுக்களை ஸ்கேன் செய்து மிக எளிமையாக சரிபார்க்க முடியும்.

No comments: