தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் எதுவும் செய்யமாட்டோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, April 3, 2020

தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் எதுவும் செய்யமாட்டோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி


cm edapadi palanisamy warns that strict action will be taken against those who violate the curfew



சென்னை: வேறு வழியில்லை... தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். கண்ணுக்கு தெரியாமல் நெருங்கி தாக்கும் பேராபத்தை உடையதுதான் கொரோனாவைரஸ்.. இந்த பெரும் சவாலை நம் சுகாதார துறை ஊழியர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
 
இதற்கு மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாததால்தான் தடுப்பு நடவடிக்கையை அரசு கையில் எடுத்தது.. அதற்காகத்தான் ஒரே வழி ஊரடங்கு என்ற முடிவுக்கும் வந்து அதனை அமலபடுத்தியது. ஆனால் இந்த வைரஸின் அபாயத்தை பொதுமக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.. எல்லாருமே சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தினமும் எச்சரித்தபடியே உள்ளது.. ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்து வருவது கடுமையான அதிருப்தியை தந்து வருகிறது. சமூக விலகல் சில இடங்களில் சுத்தமாக கடைபிடிக்கவும் இல்லை.. வைரஸ் பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளதால் முதல்வர் இப்போது இதுகுறித்து வார்னிங் தந்துள்ளார். செய்தியாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி 
பேசும்போது சொன்னதாவது: "தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 144 தடை உத்தரவு மக்களை துன்புறுத்த அல்ல... மக்களைக் காக்கவே. ஒவ்வொரு குடும்பமும் அரசுக்கு முக்கியம்... ஒவ்வொரு உயிரும் அரசு முக்கியம்... இதுவரை மக்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அரசு, ஊரடங்கை மீறும்பட்சத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்... ஊரடங்கை தேவையில்லாமல் மீறினால், 144 தடை உத்தரவு கடுமையாக்கப்படும், அரசுக்கு வேறு வழியில்லை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலத்தவர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, மருத்துவ வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது . மேலும் தமிழக அரசின் கோரிக்கை பரிசீலிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். வீடுகளுக்கு டோக்கன் கொடுக்கும் போதே ரூ1,000 நிதி உதவியும் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு ரூ3,000 உதவித் தொகை வழங்கப்படும்... தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 
பிடித்தம் எதுவும் செய்யமாட்டோம்" என்றார்.

No comments: