10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Tuesday, March 31, 2020

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யலாமா? கருத்து தெரிவிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு


cancel - Liberal Dictionary


பத்தாம் வகுப்பு பொது தேர்வை தள்ளி வைப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப் பில் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக, நாடு முழுதும்,21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பல்வேறு வகை பாட திட்டங்களில், பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி. எஸ்.., பாட திட்டத்திலும், பிளஸ் 2 மற்றும், பத்தாம் வகுப்புக்கான சில பாடங்களுக்கு, தேர்வகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

தமிழக பாட திட்டத்தில், 10ம் வகுப்பு பொதுதேர்வுகள், இந்த மாதம், 27ல் நடத்தப்பட இருந்தநிலையில், அந்த தேர்வுகளும் தள்ளி வைக்கப்பட்டன. மீண்டும் ஏப்., 15 முதல்பொது தேர்வை நடத்தலாம் என, ஏற்கனவே திட்டமிடப்பட்டது.ஆனால், கொரோனா வின் கொடூர தாக்கத்தால், ஏப்ரலில் நிலைமை முழுதுமாக கட்டுப்பாட்டில் வந்து விடுமா என்பது, சந்தேகமே என்ற நிலை உருவாகி உள்ளது. மேலும், ஏப்ரலில் ஊரடங்கு முடிந்தாலும், உடனே தேர்வை நடத்துவதற்காசாத்தியக்கூறு
கள் இல்லை .
எனவே, மே மாதம் இரண்டாம் வாரத்தில் இருந்து தான் தேர்வை துவங்கலாம். ஆனால், நாடு முழுதும் அனைத்து துறைகளிலும், மறுகட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு
அதிகபட்ச நிதி தேவைப்படும்.

எனவே, இந்த ஆண்டு மட்டும் பத்தாம் வகுப்புக்கு பொது தேர்வை ரத்து செய்யலாம் என்றும், அனைவருக்கும் தேர்ச்சிஅறிவிக்கலாம் என்றும், பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந் நிலையில் , காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் தேர்ச்சியை முடிவு செய்யலாம் என்றும், சிலர்கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பத்தாம் வகுப்பு தேர்வு தொடர்பாக, எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து,பள்ளி கல்வி அதிகாரிகளிடம், அரசு தரப்பில்
ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன், இதுபோன்ற அசாதாரண
சூழல் ஏற்பட்டதா; அப்போது, எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை
செயலகம் அறிவுறுத்தி உள்ளது.

No comments: