School Morning Prayer Activities - 15.07.2019 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, July 14, 2019

School Morning Prayer Activities - 15.07.2019


 Image result for morning prayer


T.தென்னரசு,
.ஆசிரியர்,
TN டிஜிட்டல் டீம்,
திருவள்ளூர் மாவட்டம்.
9600423857
செய்திச் சுருக்கம்*

🔮கர்ம வீரர்  காமராசர் பிறந்த நாளான இன்று பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

🔮ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து சந்திரயான்-2 விண்கலம், 15-07-19 அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது.

🔮இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் சோலான் மாவட்டத்தில் இன்று உணவகம் ஒன்று இடிந்து விழுந்த விபத்தில் ஏராளனான ராணுவ வீரர்கள் உள்பட 35 பேர் இடிபாடுகளில் சிக்கினர். 2 சடலங்கள் மீட்கப்படுள்ளன.

🔮கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் ‘கார்கில் வெற்றி ஜோதியை ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்  ஏற்றி வைத்தார்.

🔮முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் தேர்வை நடத்த மத்திய அரசு திட்டம்.

🔮இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவு.

🔮தோடர்படுகர் மொழிகளை மீட்டெடுக்கும் பணியை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது - மாஃபா பாண்டியராஜன்.
♻♻♻♻♻♻♻


இன்றைய திருக்குறள்*

*கடவுள் வாழ்த்து*

*குறள் 3*:

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்

*மு. உரை*:

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்

*சாலமன் பாப்பையா உரை*:

மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்

*கலைஞர் உரை*:

மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

✡✡✡✡✡✡✡✡

*பொன்மொழி*

வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்கலாக இருங்கள்.
  - அன்னை தெரேசா

♻♻♻♻♻♻♻♻

*பழமொழி*

As is the mother, so is her daughter.

தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை.

✍✍✍✍✍✍✍✍

*பொது அறிவு*

1. காமராசர் பிறந்த நாள் எது?

*ஜூலை 15*

2. காமராசர் பிறந்த நாள் விழாவை தமிழக அரசு என்ன விழாவாக கொண்டாடுகிறது?

*கல்வி வளர்ச்சி நாள் விழா*

3. காமராசர் எந்த மாவட்டத்தில் பிறந்தார்?

*விருதுநகர்*

4. மாணவர்களுக்கு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர் யார்?

*காமராசர்*

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

*Important Used Words*

 Manager  மேலாளர்

 Mason  கொத்தனார்

 Mechanic  இயந்திர தொழில் செய்பவர்

 Mediator  இடையீட்டாளர்

 Messenger  தூதர்

♻♻♻♻♻♻♻♻

*அறிவோம் தமிழ்*

*எட்டுத் தொகை*

நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு.

📫📫📫📫📫📫📫📫

*Today's grammar*
Articles Usage

Definite Article – ‘The’

'The’ is used:

When the same thing or person mentioned again, that is, a particular thing or person
*Example*:

I bought an orange.
The orange is sweet.

When there is only one such thing.
*Example*:

the earth, the sun, the moon

Before the names of famous buildings, etc
*Example*:

The Eiffel Tower, The Great Wall of China

When a singular noun is used to point out a whole class, race, group, etc.
*Example*:

The bear is a strong animal.

Before the special names of rivers, seas, oceans, mountain ranges, groups of islands, certain organizations, political parties, and countries such as the U.S.A., the U.K., the U.S.S.R. and the U.A.E., The Nile, The Dead Sea, The Pacific Ocean, The Himalayas, The United Nations, The Republican Party, etc

Before the names of holy or important books
*Example*:

The Khuran, The Bible

Before an adjective when the noun is understood.
*Example*:

The poor need help.

☘🍀🌿☘🍀☘🍀🍀

*உடல் நலம்*

*சிரசாசனம்*

போதிய இரத்த சுழற்சி உடலில் இல்லாததால், மூளைக்கு செல்லும் இரத்தத்தின் ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஒற்றைத் தலைவலியானது ஏற்படுகிறது. எனவே உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதற்கு சிரசாசனம் செய்ய வேண்டும்.

🗣🗣🗣🗣🗣🗣🗣🗣

*இன்றைய கதை*

*பிடிவாதம் கொண்ட சிறுமி*

 ஒரு ஊரில் கீதா என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவள் நன்றாகப் படிப்பாள் அவளிடம் கொடுக்கும் வேலையை சரியாக செய்து முடிக்கும் திறமைசாலியானவள் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரிடமும் அன்பாகவும் பணிவாகவும் நடந்து கொள்வாள்.

 ஆனால் கீதாவின் பிடிவாத குணம் மட்டும் யாருக்கும் பிடிக்கவில்லை. கீதா அவள் அம்மா அப்பாவிடம் எது கேட்டாலும் உடனே வாங்கி தந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் வீட்டையே போர்க்களம் போல ஆக்கிவிடுவாள்.

 அடுத்த நாள் கீதாவின் பிறந்தநாள். ரொம்ப நாட்களாகக் கேட்டுக்கொண்டிருந்த விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை அன்றே வாங்கித் தரச்சொல்லி அடம்பிடித்தாள்.

 கீதாவின் பெற்றோர் தங்கள் சூழ்நிலையைக் கூறி அடுத்த மாதம் வாங்கித் தருகிறேன் என்றனர். அதெல்லாம் முடியாது நான் பள்ளிக்கூடத்திற்கு சென்று வீட்டிற்கு வரும்போது நான் கேட்ட கைகடிகாரம் வேண்டும். இல்லாவிட்டால் நடப்பதே வேறு என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

 கீதாவின் பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர். பள்ளி முடிந்ததும் கீதா வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு குடிசை ஓரத்தில் ஒதுங்கி நின்றாள். அப்பொழுது அந்த வீட்டிற்குள் இருந்து வந்த சத்தத்தைக் கேட்டாள்.

 அப்பா உங்க கால் ரொம்ப அடிப்பட்டிருக்கு. இருந்தும் ஏன் லீவு எடுக்காம வேலைக்குப் போறீங்க? என்று ஒரு சிறுமி பேசுவதை கேட்டாள். நீ தான் எல்லோரும் டூர் போறாங்க நானும் போகனும்னு சொன்னல்ல. நான் லீவு போடமா வேலைக்குப் போனாத்தான் உனக்கு டூர் போக பணம் தர முடியும் என்றார்.

 அப்பா நான் டூர் போகலை. அடுத்தமுறை போய்க்கிறேன். நீங்க உங்க காலைப் பார்த்துக்கோங்கப்பா என்றாள். அந்த சிறுமியின் அம்மா நீங்க ரெஸ்ட் எடுங்கஇ அவள் டூர் போகட்டும். ஒரு பெரிய வீட்டுல வேலை இருக்குதாம் நான் வேலைக்குப்போறேன். அந்த பணத்துல அவளுக்கு டூர் போகவும் உங்க காலுக்கு வைத்தியம் பார்க்கவும் சரியாக இருக்கும் என்றாள்.

 ஒரு சிறுமி தன் அப்பாவின் கஷ்டத்தைப் புரிந்து கொண்டு விட்டுக்கொடுக்கிறாள் அவள் அம்மாவும் குடும்பத்திற்காக வேலைக்கு செல்கிறார். இதை பார்த்த கீதா அவளின் தவறினை உணர்ந்தால் இனி நாமும் அம்மா அப்பாவுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று நினைத்தால்.

 கீதா வீட்டிற்கு வந்ததும் பெற்றோர் கீதா என்று அவர்கள் வாயெடுக்க அப்பா கைக்கடிகாரம் இப்போ இல்லைன்னா என்ன அடுத்த பிறந்த நாளைக்கு வாங்கித்தாருங்கள் என்று கூறினாள். கீதா பேசியதைக்கேட்டு வியப்படைந்தனர் அவளது பெற்றோர். தனது பிடிவாத குணத்தை மாற்றிக்கொண்டு மகிழ்ச்சியோடு பிறந்த நாளைக் கொண்டாடினாள் கீதா.

*நீதி* :
வீட்டின் சூழ்நிலைகளை புரிந்து கொள்ளுதல் வேண்டும்.


No comments: