சீனியருக்கு ஏமாற்றம்; ஜூனியருக்கு யோகம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, June 26, 2019

சீனியருக்கு ஏமாற்றம்; ஜூனியருக்கு யோகம்



தமிழகத்தில் பிளஸ் 2 முடித்து இரண்டு ஆண்டுகள் காத்திருந்த மாணவர்களுக்கு, கல்வித்துறை உத்தரவால் இலவச லேப்டாப்கள் கிடைக்கவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் இருந்த இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் பிளஸ் 1க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
வழக்கமாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற பின் அடுத்த கல்வியாண்டில் தான் மாணவருக்கு லேப்டாப் வினியோகிப்படும். அந்த வகையில் 2017 - 18ம் ஆண்டில் பிளஸ் 2முடித்தவர்கள் தற்போது கல்லுாரிகளில்2ம் ஆண்டு படிக்கின்றனர்.இவர்களுக்குநடப்பு கல்வியாண்டில் ஒதுக்கப்பட்ட லேப்டாப்களை, தற்போது பிளஸ் 1 படிக்கும் மாணவருக்கு வழங்க சிறப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துஉள்ளனர்.அவர்கள் கூறுகையில், "இரண்டு ஆண்டு காத்திருந்தும் கிடைக்கவில்லை. எங்களுக்கு முன் மற்றும் பின் படித்த அனைத்து மாணவர்களுக்கும் லேப்டாப் கிடைத்துள்ளது.

எங்களுக்கு ஏன் மறுக்கப்பட்டுள்ளது" என்றனர்.கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நடப்பு கல்வியாண்டில், 2017 - 2018, 2018- 2019 மற்றும் 2019 - 2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து 15,53,359 லேப்டாப் ஒதுக்கப்பட்டன.

பிளஸ் 1க்கும் லேப்டாப் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளதாலும் தற்போது நீட், ஜே..., சிலாட் உள்ளிட்ட பல தேர்வுகளுக்காக அவர்கள் தயாராகி வருவதாலும் 2017 - 2018ம் ஆண்டுக்குஒதுக்கப்பட்ட லேப்டாப்களை அவர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டது, என்றார்.இதை அறிந்த பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். லேப்டாப் வழங்குவது மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

No comments: