பயோ மெட்ரிக் வருகை பதிவு சீராக இல்லை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, July 1, 2019

பயோ மெட்ரிக் வருகை பதிவு சீராக இல்லை


Related image


 உடுமலை கல்வி மாவட்டத்தில், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பள்ளி நேரத்தில், மாணவர்களுக்கு முன்பாக ஆசிரியர்கள் இருக்க வேண்டுமென, 'பயோமெட்ரிக்', முறை செயல்படுத்தப்பட்டது.

ஆசிரியர்கள் மட்டுமின்றி, அலுவலர்களும், இம்முறையில் வருகைப்பதிவு செய்ய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.ஆசிரியர்களுக்கு, இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கைவிரல் ரேகை வைப்பதற்கு, பயிற்சி வழங்கப்பட்டது.

இதற்கு, அனைத்து பள்ளிகளிலும் கம்ப்யூட்டர் வசதி உட்பட அனைத்தும் சரிபார்க்கப்பட்டு, கருவிகள் பொருத்தப்பட்டன. கல்வியாண்டின் துவக்கம் முதல் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. இந்த நடைமுறையில், ஆசிரியர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு நிமிடம் தாமதித்தாலும், 'தாமதம்', என்ற கணக்கில் பதிவாகி விடுகிறது
 
.மூன்று முறைக்கு மேல், தொடர்ந்து பதிவில் தாமதம் ஏற்பட்டால் 'ஆப்சென்ட்', ஆக பதிவாகிறது

கல்வியாண்டு துவங்கியது முதல், ஆசிரியர்கள் இதில் பதிவு செய்து வருகின்றனர். ஆனால், சில நாட்கள், 'நெட்ஒர்க்' கிடைக்காமல் போவது மற்றும் 'சர்வர்' பிரச்னையால், பதிவு மேற்கொள்ள முடிவதில்லை என, புகார் தெரிவித்துள்ளனர்.

தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், '' வாரம் ஒருமுறை, அந்தந்த பள்ளிகளுக்கு அவர்களுக்கான வருகைப்பதிவுகள் குறித்து தகவல் அனுப்பப்படும் என, தெரிவிக்கப்பட்டது.

ஆனால், எதுவும் அனுப்பப்படவில்லை. சர்வர் வேலை செய்யும் போது பதிவு செய்வதில் சிக்கல் இல்லை. சில நாட்கள், தொழில்நுட்ப பிரச்னையால், பதிவேடுகளில் மட்டுமே வருகை குறிப்பிடப்பட்டுள்ளது.


அந்த நாட்கள், இணையதளத்தில் எவ்வாறு பதிவிடப்பட்டுள்ளது என்பது குறித்து, கல்வித்துறையிலிருந்தும் எந்த தகவல்களும் அனுப்பப்படவில்லை.

எந்த நாட்கள் தாமதமாகியுள்ளது என்பதும், பதிவுகள் வழங்கப்பட்ட பின்னரே அறிய முடியும் என்பதால், ஆசிரியர்களுக்கான விடுப்பு எடுக்கவும் அச்சத்தில் உள்ளனர்,'' என்றார்.


No comments: