Flash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை !!! தமிழக அரசு.. - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, April 26, 2019

Flash News இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இனி இல்லை !!! தமிழக அரசு..


Image result for no vacant


இனி
புதிய இடைநிலை
ஆசிரியர்களை
TET மூலம்
நியமனம் செய்யாது...!!!

*FLASH NEWS*
 *இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிக்கு மாற்ற நீதியரசர் பரிந்துரை*

 
*இன்று 25.04.2019
மதுரை உயர்நீதிமன்றத்தில் அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது*

*இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவது சார்பான வழக்கு விசாரணை
31 வழக்காக
பட்டியலில் இடம் பெற்றிருந்தது

அரசு தரப்பில் காலையே இந்த வழக்கு
இன்று விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது

 அதன்பேரில்
மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது,

 விசாரணையின்போது
அரசு தரப்பில் NCTE விருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடிதத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது
அந்த கடிதத்தில்
இடைநிலை ஆசிரியர்களை (Bridge Course)
ஆறுமாத பயிற்சிக்குப் பின்னர்
முன்பருவ கல்வியான
(LKG UKG) அங்கன்வாடி மையத்தில் பணியமர்த்தலாம்
என்ற  அடிப்படையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
 
 அதனையடுத்து
அரசு தரப்பில்

அரசு பள்ளிகளில்
1700க்கும் மேற்பட்ட பணியிடங்களும்

 உதவிபெறும் பள்ளிகளில் 5300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்

வருடத்திற்கு 400 கோடி ரூபாய்க்கு மேல்  செலவாகிறது
என்ற வாதத்தை முன்வைத்தனர்

உபரி ஆசிரியர்களை மாநிலம் முழுவதும் கலந்தாய்வு வைத்து,,,

 மாறுதல்கள் வழங்கி விட்டு பின்னர் மீதம் இருக்கும் உபரி ஆசிரியர்களை வேண்டுமானால் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள்

மேலும் மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு
திரும்பும் வரை
புதிய நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது

 எனவும் நீதியரசர்கள் கூறினார்.

விரைவில் நீதிமன்ற ஆணை வெளியாகும் என தகவல் வெளியாகிறது அதில் முழு விபரங்களும் குறிப்பிடப்படும்.*

குறிப்பு
அரசுப் பள்ளிகளில்
வருடம் தோறும்
மாணவர் சேர்க்கை
எண்ணிக்கை
குறைவதால்..

இருக்கும்
ஆசிரியர்களுக்கே
பணி புரிய
இடமில்லை ...
 
இதில்
எப்படி புதிய TET
நியமனம்...???

ஒவ்வொரு மாவட்டத்தில்
இயங்கும்
ஆசிரியர் பயிற்சி
மையத்தையே
அரசு மூடி விட்டது... ???
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் இனி இருக்காது என்பதே இதன் பொருளாகும் .
தகவல் ஆசிரியர் திரு. தாடி முருகன்
தேனி மாவட்டம்.

No comments: