School Morning Prayer Activities - 22.03.2019 - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, March 21, 2019

School Morning Prayer Activities - 22.03.2019


 Image result for morning prayer


 இன்றைய செய்தி துளிகள்:


1) நடுநிலையோடு தேர்தல் பணி ஜாக்டோஜியோ அறிவிப்பு!

2) காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.

3) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடு!

4) அருகாமை வாக்குசாவடிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிதனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

5) யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்  விசேஷ் பரமேஸ்வரன் (13வயதுதங்கப் பதக்கம் வென்றார்.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
 
திருக்குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.
 
பழமொழி :

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  - ஜெபர்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை

2.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி

நீதிக்கதை :

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)


அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன்சிங்கராசாநான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்குசிங்கராசாவாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.



No comments: