தனியார் பல்கலைகள், சுயமாக கட்டணம் நிர்ணயிக்கவும், நன்கொடை வசூலிக்கவும், மத்திய அரசு தடை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, February 23, 2019

தனியார் பல்கலைகள், சுயமாக கட்டணம் நிர்ணயிக்கவும், நன்கொடை வசூலிக்கவும், மத்திய அரசு தடை



தனியார் பல்கலைகள், சுயமாக கட்டணம்

நிர்ணயிக்கவும், நன்கொடை வசூலிக்கவும், மத்திய அரசு தடை விதித்துள்ளது.அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு, மாநில அரசால் நியமிக்கப்படும், கட்டண நிர்ணய கமிட்டி வழியாகவோ அல்லது பல்கலைகளின் சிண்டிகேட் வழியாகவோ கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தனியார் பல்கலைகளுக்கு, அந்தந்த நிர்வாகங்களே கட்டணத்தை நிர்ணயிக்கின்றன.இந்நிலையில், தனியார் நிகர்நிலை பல்கலைகளுக்கான புதிய விதிகளை, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது. அதில், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.அதன் விபரம்:அனுமதியின்றி, எந்த புதிய படிப்பையும், தனியார் பல்கலைகள் துவக்கக் கூடாது. தனியார் நிகர்நிலை அந்தஸ்து பெறும் பல்கலைகளுக்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்க வேண்டும்
தேசிய தர வரிசை பட்டியலில், 50 இடங்களுக்குள் இடம் பெற வேண்டும். வெளிப்புற கல்வி மைய வளாகம் அமைக்க, முன் அனுமதி பெற வேண்டும்.நிகர்நிலை பல்கலைகள், தாங்களாகவே கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கக் கூடாது. மாநில அரசுகளின் கீழ் செயல்படும் கட்டண நிர்ணய கமிட்டியின் வழியாக, கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதற்கு மேல், மாணவர் சேர்க்கை கட்டணம், தேர்வு கட்டணம், நன்கொடை என, எந்த தலைப்பிலும் பணம் வசூலிக்கக் கூடாது.அனுமதிக்கப்பட்ட கட்டண விபரங்களை, தங்கள் நிறுவன இணையதளங்களில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.இவ்வாறு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

No comments: