நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, February 28, 2019

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்



பிளஸ் 2 பொதுத் தேர்வு தமிழகம்புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளதுஇந்தத் தேர்வினை மொத்தம் 8.87 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.
 
தமிழகம்,  புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  வரும் 19-ஆம் தேதி வரை இந்தப் பொதுத்தேர்வு நடைபெறும்.

 இதனை மொத்தம் 7, 082 மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ, மாணவிகள்,  பழைய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 200 மதிப்பெண்) 25,741 தனித்தேர்வர்கள்,  புதிய நடைமுறையில் (ஒரு பாடத்துக்கு 100 மதிப்பெண்கள்) 1,144 தனித் தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதவுள்ளனர்.


 இதில் 4 லட்சத்து 60 ஆயிரத்து 6 பேர் மாணவர்கள்;  4 லட்சத்து ஆயிரத்து 101 பேர் மாணவிகள் ஆவர்.  மேலும் இரு திருநங்கைகளும் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ளனர்.
 
150 புதிய தேர்வு மையங்கள்:  சென்னை மாநகரில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 49 ஆயிரத்து 419 மாணவ, மாணவிகள் 158 தேர்வு மையங்களில் தேர்வெழுதுகின்றனர்.


 புதுச்சேரியில் 150 பள்ளிகளிலிருந்து 40 தேர்வு மையங்களில் மொத்தம் 15,408 பேர் தேர்வெழுதவுள்ளனர்.


 பிளஸ் 2 பொதுத் தேர்வுக்காக  தமிழகம்,  புதுச்சேரியில் மொத்தம் 2,944 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 150 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.


 சிறைவாசிகளுக்காக...


 நிகழாண்டு வேலூர்,  கடலூர், சேலம்,  கோயம்புத்தூர்,  மதுரை,  பாளையங்கோட்டை,  திருச்சி,  புழல் சிறைகளிலுள்ள 45 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுதவுள்ளனர்.


 இந்த ஆண்டு தமிழ் வழியில் பயின்று பிளஸ் 2 தேர்வெழுதும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 13 ஆயிரத்து 884 ஆகும்.

 தேர்வுக்காக சுமார் 44 ஆயிரத்து 400 ஆசிரியர்கள் அறைக் கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.


பொதுத் தேர்வில் 2,400 மாற்றுத் திறனாளிகளுக்கு தேர்வெழுத கூடுதலாக  ஒரு மணி நேரம் உள்பட அவர்கள் கோரிய சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.


செல்லிடப்பேசிக்கு தடை:


அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 4 ஆயிரம் எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்துக்குள் செல்லிடப்பேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 தேர்வர்களின் செல்லிடப்பேசி பராமரிப்புக்குத் தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது.


தேர்வுக் கட்டுப்பாட்டு அறை: பொதுத் தேர்வு தொடர்பாக மாணவர்கள்,  தேர்வர்கள்,  பொதுமக்கள் தங்களது புகார்கள்,  கருத்துகள்,  சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழு நேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.


 தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும்.



தேர்வுக் கட்டுப்பாட்டு அறை தொடர்பு எண்கள்:
9385494105, 9385494115, 9385494120, 9385494125

No comments: