சொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறை அமைத்த தலைமை ஆசிரியை - திறந்து வைத்து பாராட்டிய CEO - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, February 24, 2019

சொந்த பணம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் வகுப்பறை அமைத்த தலைமை ஆசிரியை - திறந்து வைத்து பாராட்டிய CEO


 
 
ஆரணி அடுத்த களம்பூர் அருகே உள்ள முக்குரும்பை பாலம்பாக்கம் கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், பொது மக்கள்  மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் உணவு திருவிழா,புரவலர்ள சேமிப்பு என்று முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த முப்பெரும் விழாவை திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் அவர்கள் தொடங்கி வைத்தார்.
 
இந்த விழாவில் பள்ளி மாணவர்கள் 12மொழியில் அனைவரையும் வரவேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள்,பொது மக்கள் சார்பில் கல்வி சீர்வரிசைகள்,படவேடு சீனிவாச சேவை அறக்கட்டளை சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.
 
சுமார் ஓரு லட்சம் மதிப்புள்ள ஸ்மார்ட் கிளாஸ் பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வழங்கினார். நிகழ்ச்சியில் போளூர் வட்டார கல்வி அலுவலர் கே.மோகன், வட்டார கல்வி வளமையம் ஆர்.பாஸ்கரன் சீனிவாச அறக்கட்டளை நிர்வாக அலுவலர் டி.சுப்பையா மற்றும் பள்ளி மாணவர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி உதவி ஆசிரியை செந்தில்வடிவு நன்றி கூறினார்.
 


முதன்மை கல்வி அலுவலர் உட்பட அனைத்து  அதிகாரிகளும், ஊர் பொதுமக்களும் தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்களை அவர்களின் பணி மென்மேலும் தொடரவும் வெற்றிபெறவும் வாழ்த்தினர்.

No comments: