போலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, October 13, 2018

போலி நியூஸ்களுக்கு குட்பாய் வாட்ஸ் ஆப்- ஜியோவின் புது முயற்சி.!



இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் செயலியாக வாட்ஸ் ஆப் இருக்கின்றது. இதன் மூலம் பரபரப்படும் போலி தகவல்கள் பெருகி வந்தன.

இதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசும் பல்வேறு முறை வலியுறுத்தியது. இதைத்தொடர்ந்து, வாட்ஸ் ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ தற்போது போலி தகவல்களை ஒழிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
 
பிரச்சார வாகனம்:
வாட்ஸ் ஆப் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் பிரச்சார வாகனம் மூலம் பொது மக்கள் கூடும் இடங்களில் சிறிய நாடகங்கள் மூலம் போலி செய்திகள் பரப்புவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆபத்துகள் விளக்கப்படுகின்றது.

முதல் கட்டமாக ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூர் பகுதியில் சிறிய நாடகம் மக்களிடம அரங்கேற்றம் செய்யப்பட்டது.
 
 எளிமையாக பரப்பும் போலி தகவல்:
நாடகத்தின் காட்சிகள் பயனர்கள் மிக எளிமையாக பரப்பும் போலி தகவல் எவ்வாறு பெரும் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்பதை தீவிரத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது.


 மத்திய அரசு அழுத்தம்:
போலி செய்திகளை கட்டுப்படுத்த பேஸ்புக் மற்றுமு; வாட்ஸ் ஆப் செயலிகளுக்கு மத்திய அரசு கொடுத்த அழுத்தால், வாட்ஸ் ஆப் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

ஜனவரி 2018 முதல் இதுவரை சுமார் 30பேர் போலி செய்திகள் பரப்பப்படுவதால், கொல்லப்பட்டு இருப்பதாக இந்தியா ஸ்பென்ட வெளியிட்டு இருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 வாட்ஸ் ஆப் ரிலையன்ஸ் இணைவு:
வாட்ஸ் ஆப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இணைந்து போலி செய்திகளை குட்பாய் செல்லும் விதமாக இதை தடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளன. ஜியோ நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உருவெடுத்து இருக்கின்றது. இந்நிலையில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோவால் போலி வாட்ஸ் ஆப் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
 
 ஜியோவின் வழிமுறைகள்:
வாட்ஸ் ஆப் பிரச்சாரத்தின் திட்டத்தின் அங்கமாக ஜியோபோனில் எவ்வாறு வாட்ஸ் ஆப் செயலியை இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வழிமுறைகளும் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் பல லட்சம் இந்தியர்களும் முதன்முறையக இன்டர்நெட் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.

No comments: